தீபாவளிக்கு முன் LPG Gas சிலிண்டர்களின் விலையில் அதிரடி ஏற்றம்: விலை விவரம் இதோ
LPG Price Hike: எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது.
Commercial LPG Cylinder Price Hike: நவம்பர் மாதத்தின் முதல் நாளே பொது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. பணவீக்கத்தின் தாக்கம் காரணமாக குளிர் கால துவக்கத்திலேயே மக்களுக்கு சூடான ஒரு செய்தி கிடைத்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன. வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் புதன்கிழமை முதல் அதாவது நவம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விலை உயர்வுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1833 ஆக உள்ளது. முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதியும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.209 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1999.50 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதன் விலை தற்போது ரூ.1833 ஆக உள்ளது. கொல்கத்தாவில் இது ரூ.1943 -க்கு கிடைக்கும். மும்பையில் வணிக எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1785.50 ஆகும்.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளன, ஆனால் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இது பொது மக்களுக்கு சற்று நிவாரணத்தை அளித்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூ.918.5 ஆகவும், நாட்டின் தலைநகர் டெல்லியில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.903 ஆகவும், கொல்கத்தாவில் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.929 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் எல்பிஜியின் விலை ரூ.902.5 ஆக விற்பனையில் உள்ளது.
மேலும் படிக்க | சுமார் 9% வட்டியை அள்ளி வழங்கும் சில வங்கிகள்... தீபாவளி சலுகையை மிஸ் பண்ணாதீங்க!
விமான எரிபொருளின் விலை குறைப்பு
விமான எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. தொடர்ந்து மூன்று முறை உயர்த்தப்பட்ட பிறகு, விமான எரிபொருள் விலை உயர்வுக்கு தடை ஏற்பட்டுள்ளது. ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் விலை அதாவது ATF விலை ரூ.1074/KL குறைந்துள்ளது. புதிய விலை இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் குறைப்புக்குப் பிறகு, விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களுக்கான கட்டணங்களை குறைக்கலாம் என நம்பப்படுகின்றது. இது பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
கூடுதல் தகவல்
உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கான மானியத் தொகை அதிகரிக்கப்பட்டு, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 200 ரூபாய் மானியம் கொடுத்து வந்த மத்திய அரசு, அண்மையில் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை 100 ரூபாய் அதிகரித்தது.
இதனால், மானியத்துடன் கூடிய எல்பிஜி சிலிண்டரின் விலை, 603 ஆக உள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பப் பெண்களுக்காக எல்பிஜி இணைப்புகளை வழங்க PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 மே மாதம் தொடங்கினார். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தினால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன.
மேலும் படிக்க | PPF அளிக்கும் ஜாக்பாட் வருமானம்: இந்த விதிகளில் கவனம் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ