சென்னை: உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கான மானியத் தொகை அதிகரிக்கப்பட்டு, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 200 ரூபாய் மானியம் கொடுத்து வந்த மத்திய அரசு, அண்மையில் எரிவாயு உருளைக்கான மானியத்தை 100 ரூபாய் அதிகரித்தது.
இதனால், மானியத்துடன் கூடிய எல்பிஜி சிலிண்டரின் விலை, 603 ரூபாயாக விற்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பப் பெண்களுக்காக எல்பிஜி இணைப்புகளை வழங்க PMUY எரிவாயு சிலிண்டர் மானியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 மே மாதம் தொடங்கினார்.
இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனைகள் என்ன? தெரிந்துக் கொள்வோம். வறுமைக் கோட்டிற்குகீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டமான உஜ்வாலா திட்டத்தின் அடுத்தகட்டமாக உஜ்வாலா யோஜனா 2.0 தற்போது அமலில் உள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தினால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தில் சேரும் புதிய பயனாளிகளுக்கு 1,600 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது கேஸ் அடுப்பு பெற்றுக்கொள்வது என அவர்கள் விருப்பட்டி அந்த பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படும் உஜ்வாலா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட என அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்
அடையாள ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்ற வேண்டும்
விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட பிறகு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கும்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!
உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
இலவச சிலிண்டர் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு பெறாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்
இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்
பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தின்மூலம் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ்
ஆதார் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ரேஷன் கார்டு
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஜாதி சான்றிதழ்
முகவரி ஆவணம்
விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம்
ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டால், விண்ணப்பித்த பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ