சுமார் 9% வட்டியை அள்ளி வழங்கும் சில வங்கிகள்... தீபாவளி சலுகையை மிஸ் பண்ணாதீங்க!

FD  என்னும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாகும். ஏனெனில் உங்கள் பணம் அங்கே பாதுகாப்பாக உள்ளது. உங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2023, 06:27 PM IST
  • எஃப்டி முதலீடுகளுக்கு 8 சதவீதத்திற்கு மேல் வட்டி அளிக்கும் வங்கிகள்.
  • FD முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாகும்.
  • உங்கள் பணம் அங்கே பாதுகாப்பாக உள்ளது.
சுமார் 9% வட்டியை அள்ளி வழங்கும் சில வங்கிகள்... தீபாவளி சலுகையை மிஸ் பண்ணாதீங்க! title=

பண்டிகை கால FD விகிதங்கள்: திருவிழா காலத்தின் போது நிலையான வைப்புத்தொகையை (Fixed Deposit) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இந்த தீபாவளிக்கு FDக்கு அதிக வட்டியைப் பெறலாம். நீங்கள் அதிக வட்டி பெறும் FD இல் முதலீடு செய்வதற்கு அத்தகைய வங்கி அல்லது சிறு நிதி வங்கி குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம். இன்று, FD மீதான வட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாக உள்ளது. FD (நிலையான வைப்புத்தொகை) கணக்கில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாகும். ஏனெனில் உங்கள் பணம் அங்கே பாதுகாப்பாக உள்ளது. மேலும், முதலீடுகளுக்கு  நல்ல வருமானமும் கிடைக்கும். இந்நிலையில், சாமானியர்களின் எஃப்டி முதலீடுகளுக்கு 8 சதவீதத்திற்கு மேல் வட்டி அளிக்கும் வங்கிகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்

1) யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank): 1001 நாட்களுக்கான எஃப்டியில் பொது மக்களுக்கு 9.00 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீத வட்டியையும் வங்கி வழங்குகிறது.

2) ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank): இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான எஃப்டிகளுக்கு வங்கி பொது மக்களுக்கு 8.10 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.80 சதவீத வட்டியையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | அதிரடி வட்டியை அள்ளிக்கொடுக்கும் ரிசர்வ் வங்கி: உடனே முதலீடு செய்யுங்கள்

3) சூர்யோதாய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank): 999 நாட்களுக்கு எஃப்டியில் பொது மக்களுக்கு 8.51 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.76 சதவீத வட்டியும் வங்கி வழங்குகிறது.

4) உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank): 560 நாட்களுக்கு எஃப்டியில் பொது மக்களுக்கு 8.00 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீத வட்டியையும் வங்கி வழங்குகிறது.

5) உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank): 700 நாட்களுக்கான FDக்கு வங்கி பொது மக்களுக்கு 8.00 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீத வட்டியையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | டார்க் வெப்பில் 815 மில்லியன் ஆதார் தரவுகள் விற்பனைக்கு ரெடி! அதிர்ச்சித் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News