Budget 2024: PPF முதலீட்டாளர்களுக்கு 2 நல்ல செய்திகள், அதிகமாகிறது வட்டி
Budget 2024: இந்த பட்ஜெட் தொடர்பாக மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
Budget 2024: பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இன்னும் சில் நாட்களில் நாட்டின் நிதிநிலை அறிக்கை (Union Budget 2024) தாக்கல் செய்யப்படவுள்ளது. எனினும், 2024 ஆம் ஆண்டில் தேர்தல் நடக்கவுள்ளதால் இந்த ஆண்டின் பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும். இருப்பினும் இந்த பட்ஜெட் தொடர்பாக மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மக்களை கவரும் வகையில் அரசாங்கம் சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரிச்சுமையைக் குறைக்க பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இது தவிர நல்ல முதலீட்டு வாய்ப்பும் வழங்கப்படலாம். அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டால், 2024 பட்ஜெட்டில் இருந்து முதலீட்டாளர்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் பயனடையலாம்.
பிபிஎஃப் வட்டி விகிதம் (PPF Interest Rate)
ஏப்ரல் 2020 முதல் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF மீதான வட்டி விகிதங்களில் (Interest Rate) எந்த மாற்றமும் இல்லை. வட்டி விகிதம் 7.1% என்ற நிலையிலேயே உள்ளது. இந்தக் காலகட்டத்தில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. இவை தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த திருத்தம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முறை PPF இன் வட்டி விகிதத்தில் மாற்றம் வருமா? அடுத்த ஆண்டு, அதாவது 2024 -இல் நாட்டில் பொதுத் தேர்தல்களும் நடைபெற உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, PPF இன் முதலீட்டாளர்களை அரசாங்கம் ஆச்சரியப்படுத்தலாம்.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இரண்டாம் நிலை சந்தையில் 10 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் கூடிய பத்திரங்களின் ஈல்டைப் பொறுத்தது. கடந்த மூன்று மாதங்களின் சராசரி தரவுக்கு ஏற்ப சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு தீர்மானிக்கிறது. ஷியாமளா கோபிநாத் கமிட்டியின் பரிந்துரையின்படி இது செய்யப்படுகிறது. நிதி அமைச்சகம் இந்த சூத்திரத்தை 2016 இல் அறிவித்தது. இதன்படி, பிபிஎஃப் வட்டி விகிதம் கடந்த மூன்று மாதங்களின் பெஞ்ச்மார்க் ஈல்டை விட 25 அடிப்படை புள்ளிகள் அதிகம். 2023 செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான 10 ஆண்டு பத்திர ஈட்டுத் தொகை 7.28% ஆக உள்ளது. இதன்படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் PPF இன் வட்டி விகிதம் 7.53% ஆக இருக்க வேண்டும். ஆனால் கடந்த காலாண்டுகளில் இந்த ஃபார்முலா அடிப்படையில் பிபிஎஃப் வட்டியை மத்திய அரசு (Central Government) உயர்த்தவில்லை.
மேலும் படிக்க | சிபில் ஸ்கோர் இல்லைன்னா என்ன? கடன் கொடுக்க நாங்க ரெடி! இன்ஸ்டன்ட் Loan Apps
பிபிஎஃப் முதலீட்டாலர்களுக்கு பட்ஜெட்டில் இரண்டாவது நல்ல செய்தி
வரவிருக்கும் பட்ஜெட்டில் (Budget 2024) பிபிஎஃப் முதலீட்டு வரம்பு மாற்றப்படலாம் என கூறப்படுகின்றது. இது பிபிஎஃப் முதலீட்டாளர்களுக்கு (PPF Investors) ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப்-ல் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு விலக்கு உண்டு. இதற்கு வரிவிலக்கும் உண்டு. மேலும் அரசாங்கம் 7.1% விகிதத்தில் வருமானத்தை வழங்குகிறது. இந்த முறை பட்ஜெட்டில் பிபிஎஃப் முதலீட்டின் வரம்பு அதிகரிக்கப்படலாம். தற்போதைய முறைப்படி, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதில் வரி விலக்கு கிடைக்கும். இது 3 லட்சமாக அதிகரிக்கப்படக்கூடும். அதாவது முதலீட்டாளர் ரூ. 3 லட்சம் வரை வரி இல்லாமல் முதலீடு செய்வதற்கான விருப்பத்தைப் பெறலாம். இது முழுத் தொகையிலும் வருமானம் ஈட்ட உதவும்.
PPF வரம்பை அதிகரிப்பதன் மூலம் என்ன நடக்கும்?
PPF இன் முதலீட்டு வரம்பை அதிகரிப்பதால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
- முதலில், திட்டத்தின் மீதான கவர்ச்சி வேகமாக அதிகரிக்கும். இப்போது வரை இந்த திட்டம் மிகவும் பிரபலமாகவும் சூப்பர்ஹிட்டாகவும் உள்ளது. முதலீட்டு வரம்பை அதிகரிப்பது இதற்கான ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இரண்டாவதாக, முதலீட்டின் அளவு அதிகமாக இருந்தால், வங்கிகள் மற்றும் அரசாங்கத்தில் வைப்புத்தொகை அதிகரிக்கும். இதன் பலனை மற்ற துறைகளுக்கும் கொடுக்கலாம். இது தவிர, வரம்பை இரட்டிப்பாக்குவதன் மூலம் பிபிஎஃப் முதலீட்டாளர்கள் (PPF Investors) இரட்டிப்பு பலன்களைப் பெறுவார்கள். சேமிப்பும் அதிகமாக இருக்கும், மேலும் அதில் கிடைக்கும் வட்டியும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | SIP vs PPF: உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ