சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை தொடர்பாக உண்மைக்கு மாறாக, போலி மற்றும் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதாக வணிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஆவின் பாலின் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தவறான தகவல்கள் இணைத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றானர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே தமிழக அரசு இது குறித்து உரிய விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழக முதல்வராகப் பதவியேற்ற திரு. ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்து பிறப்பித்த உத்தரவும் அதில் ஒன்று ஆகும்.  


Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா! 
  
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழைகளுக்கு உதவும் வகையில் ஆவின் பால் விற்பனையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார், ஆனால் விஷயம் திரிக்கப்பட்டு, தவறாக பரப்புரை செய்யப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கவலை தெரிவிக்கிறார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டது, விற்பனை விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டது.


ஆனால், தற்போது பால் விலை குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பால் விலை உயர்த்தப்பட்டதைப் போல சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவது கண்டிக்கத் தக்கது என்று அவர் கூறுகிறார்.


Also Read | Puducherry முதலமைச்சர் ரங்கசாமி க்கு கொரோனா பாதிப்பு உறுதி 


கடந்த 2019இல் அதிமுக அரசு பால் விற்பனை விலையை உயர்த்தி வெளியிட்டிருந்த அரசாணையை மேற்கோள் காட்டி தான் புதிய அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதை தவறாக சித்தரிக்க முயலும் சிலர், பால் விலை உயர்த்தப்பட்டதைப் போல பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 


இதுபோன்ற போலி மற்றும் பொய்யான தகவல்கள் மக்களின் கவலையை அதிகரிக்கூடாது என்பதால், தமிழக அரசு இது தொடர்பான முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


ஆவின் பாலின் விலை குறைக்கப்பட்டிருப்பதால், ஆவின் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும்.  ஆனால், ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்தாலேயே வருமான இழப்பை சரி கட்டிவிடலாம் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகிறார்.


Also Read | இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR