இந்திய போக்குவரத்து சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனத்தை இயக்க அனுமதி இல்லை. சமீப காலமாக பள்ளி செல்லும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது அதிகரித்துள்ளது. சிறுவர்கள் வாகனங்களை கேட்கும்போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. அதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் அவர்கள் வாகனத்தை செலுத்துவது அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் ஆபத்தாகவும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்கி பிடிபட்டால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் எடுத்து வந்தனர். மேலும் பெற்றோர்களுக்கு சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை இயக்க கொடுக்கக் கூடாது எனவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தனர்.


இந்தநிலையில் தான் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும். வாகனத்தின் RC-யை ரத்து செய்யும் இந்த விதிமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


மேலும் படிக்க | மளிகை முதல் காய்கறி வரை சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ் 30 நிமிடத்தில் டெலிவரி!


மேலும் வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


மோட்டார் வாகனச் சட்டம் என்பது, சாலைப் போக்குவரத்து வாகனங்களின் பல்வேறு அம்சங்களையும் ஒழுங்குபடுத்தும் இந்திய சட்டமாகும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உரிமம் வழங்குதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், அனுமதிகள் மூலம் மோட்டார் வாகனங்களைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான சிறப்பு விதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, காப்பீடு, பொறுப்பு, குற்றங்கள், குற்றங்களுக்கான தண்டனை மற்றும் அபராதங்கள் போன்றவை தொடர்பான சட்டங்கள் உள்ளன.


மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 [1] ஐ, இந்திய அரசு உருவாக்கியது. போக்குவரத்து விதிமீறல்களை திறம்பட கண்டறிந்து, குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.  வாகன உதிரிபாகங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு, அத்துடன் மாசுக் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் ஆகியவை அவசியமாகிறது.  


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ