மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. 

7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. 

1 /9

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக நல்ல செய்தி காத்திருக்கிறது. ஊழியர்களின் ஊதியத்தில் கணிசமான ஏற்றம் ஏற்படவுள்ளது. இது குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன. புதிய அரசு அமைந்த சில நாட்களில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 

2 /9

டிஏ உயர்வு: அகவிலைப்படி உயர்வு ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. அதன் படி இம்முறை அரசு அகவிலைப்படிடை 4% உயர்த்தும் என ஒரு சாராரும் 5% உயர்த்தும் என ஒரு சாராரும் கூறி வருகிறார்கள். 

3 /9

மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படி 4% அதிகரித்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைபடி 54% ஆக உயரும். 5% அதிகரித்தால் அகவிலைப்படி 55% ஆக உயரும். எப்படி இருந்தாலும் இதன் பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

4 /9

8வது ஊதியக் குழு: இது தவிர ஊழியர்களுக்கு மற்றொரு பரிசாக, மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) முடிவுகளுக்கு பின் புதிய அரசு அமைந்தவுடன் 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. இந்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டால், 2026 ஆம் ஆண்டு அது அமலுக்கு வரும். எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை 

5 /9

சம்பள உயர்வு: ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ. 50,000 எனில், 5% டிஏ அதிகரிப்பின் படி மாதந்தோறும் சம்பளம் 2500 ரூபாய் உயர்த்தப்படும், இது ஒரு பெரிய பரிசாக இருக்கும். இதன்படி ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் உயர்வு இருக்கும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது பெரிய நிவாரனத்தை அளிக்கும். 

6 /9

அகவிலைப்படி: அகவிலைப்டி ஆண்டுக்கு 2 முறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகின்றன. எனினும் ஜனவரி மாத டிஏ ஹைக் மார்ச் மாதமும் ஜூலை மாத டிஏ ஹை செப்டம்பர்-அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றன.

7 /9

ஏஐசிபிஐ குறியீடு: ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி முதல் ஜூன் வாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது.  ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக்கு ஜனவரியின்  ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் மட்டும்தான் வந்துள்ளன. அதற்கு பிறகான மாதங்களுக்கான எண்களை தொழிலாளர் அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

8 /9

மத்திய அரசாங்கம்: 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசாங்கம் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் காரணமாக அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50% ஐ எட்டியது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.