நியூடெல்லி: ரொக்கப் பண புழகக்த்தில் இருந்து டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு இந்தியா துரித வேகத்தில் மாறிவருவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனுள்ள நடவடிக்கைகள் என நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) நடத்திய 2023-24 பரஸ்பர மதிப்பீட்டில் இந்தியாவிற்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கான, சர்வதேச நாடுகளின் நிதி சார்ந்த செயல்பாட்டுப் பணிக் குழு தான் நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task Force (FATF)), இந்தியா 2010 இல் FATF இல் உறுப்பினரானது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ML/TF அபாயங்களைக் குறைத்தல் மற்றும் JAM (ஜன் தன், ஆதார், மொபைல்) பயன்பாடு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மீதான வலுவான விதிமுறைகள், நிதிச் சேர்க்கை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக அதிகரிப்பது பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையுள்ளதாக மாற்றுவதுடன் ML/TF (money laundering (ML) & terrorist financing (TF)) அபாயங்களைக் குறைக்கிறது.


சிங்கப்பூர் மாநாடு


ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை சிங்கப்பூரில் நடைபெற்ற FATF மாநாட்டின் நிறைவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை, இந்தியாவை 'வழக்கமான பின்தொடர்தல்' பிரிவில் சேர்த்தது, இந்தப் பிரிவில் G20 நாடுகளில் 4 நாடுகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணமோசடி (money laundering) மற்றும் பயங்கரவாத நிதியுதவி (terrorist financing) ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இது முக்கியமான மைல்கல் ஆகும்.  


ஊழல், மோசடி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் உட்பட பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள வலுவான மற்றும் விரிவான நடவடிக்கைகளை FATF அங்கீகரித்துள்ளது.


மேலும் படிக்க | ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்


பண அடிப்படையிலான பொருளாதாரத்திலிருந்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான துரித நடவடிக்கைகள், பணமோசடி மற்றும் தீவிரதவாதத்திற்கு பணவுதவி செய்வதற்கான அபாயங்களை இந்தியா கவனமாக கையாள்வதாக கூறும் FATF பரஸ்பர மதிப்பீடு, இந்தியாவின் செயல்திறன், நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு கணிசமான பலன்களைத் தருவதாக குறிப்பிட்டுள்ளது.


உயர் மதிப்பீடுகள் உலகளாவிய நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்களுக்கான அணுகலை மேம்படுத்தும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் இந்தியாவின் விரைவான கட்டண முறையான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


FATF இன் இந்த அங்கீகாரம், பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்து, இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பாராட்டாக அமைகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதற்கான முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு இது ஒரு அளவுகோலை அமைக்கிறது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் சிறப்புத் திட்டம்: ரூ. 3.60 லட்சம் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு ரூ. 1.61 லட்சம் வட்டி கிடைக்கும்.!


இந்தியாவிற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, பிற நாடுகள் இந்தியாவை முன்மாதிரியாக கொண்டு இயங்குவதற்கான நாட்டின் தலைமைப்பண்பை சுட்டிக்காட்டுகிறது. 2014 முதல், இந்திய அரசாங்கம் எம்எல், டிஎஃப் மற்றும் கறுப்புப் பணத்தைக் கையாள்வதற்காக தொடர்ந்து சட்ட மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமலாக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த பல முனை மூலோபாய முயற்சிகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது.


உளவுத்துறை உள்ளீடுகளைப் பயன்படுத்தி பயங்கரவாத நிதி வலையமைப்பை அகற்றுவதில் இந்திய அதிகாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கடலோரப் பகுதியிலும் கூட பயங்கரவாத நிதி, கறுப்புப் பணம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கின்றன.


பரஸ்பர மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது, ​​FATF உடனான இந்தியாவின் ஈடுபாட்டை வருவாய்த் துறை (DoR) முன்னெடுத்துச் சென்றதாக அந்த வெளியீடு கூறியது. பல்வேறு அமைச்சகங்கள், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS), மாநில அதிகாரிகள், நீதித்துறை, நிதித்துறை கட்டுப்பாட்டாளர்கள், சுய-ஒழுங்குமுறை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய பல்வேறு, பல-ஒழுங்கு குழுவின் சிறப்பான முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளால் இந்தியாவிற்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது. நாட்டின் இந்த கூட்டு முயற்சி, பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் கட்டமைப்பு சிறதது என நிரூபித்தது. 


மேலும் படிக்க | சாலையில் நின்றாலே அடுத்த ஊருக்கு போகலாம்! தானியங்கி சாலைகள்! ஒரே கல்லில் 3 மாங்காய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ