நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றும்போது, ​​கணக்கு எண் மற்றும் பிற விஷயங்களைப் பலமுறை சரிபார்ப்போம், ஆனால் எந்த நேரத்திலும் தவறு நடக்கலாம். எனவே வேறு யாருடைய வங்கி கணக்கு தவறுதலாக நீங்கள் பணம் அனுப்பியிருந்தால் அதனை எப்படி திரும்ப பெறுவது எப்படி? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையம் வங்கி மற்றும் நமது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. இப்போது ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குப் போக வேண்டியதில்லை. முன்பெல்லாம் வங்கி சம்மந்தமான வேலைகள் நடந்தால், அதற்காக வங்கிக்குப் போக வேண்டும், இப்போது அப்படி இல்லை. இப்போது வங்கி தொடர்பான பெரும்பாலான வேலைகள் உங்கள் மொபைலில் மட்டுமே செய்யப்படுகிறது. மொபைலிலேயே கடன் கூட பெற்றுக் கொள்ள முடியும். அதேநேரத்தில் பணப்பரிமாற்றமும் செய்து கொள்ளலாம். அப்படி உங்கள் வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த தகவலை வங்கிக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.


மேலும் படிக்க | Income Tax: கவலையை விடுங்கள்! வருமான வரியை 100% சேமிக்கலாம்!


அதே நேரத்தில், பணம் மாற்றப்பட்ட வங்கி உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல் கொடுக்கும்போது, ​​பணப் பரிமாற்றத்தின் தேதி, நேரம், கணக்கு எண், தவறுதலாக பணம் மாற்றப்பட்ட கணக்கு எண் போன்ற பரிவர்த்தனையின் முழு விவரங்களையும் கொடுக்கவும். பணம் அனுப்புபவர் மற்றும் பணம் பெறுபவரின் கணக்கு ஒரே வங்கியில் இருந்தால், அதன் செயல்முறை விரைவாக முடிவடையும். ஆனால் பெறுநரின் கணக்கு வேறு ஏதேனும் வங்கியில் இருந்தால், இந்த செயல்முறைக்கு அதிக நேரம் ஆகலாம். நீங்கள் யாருடைய வங்கிக் கணக்கிற்கு தவறுதலாகப் பணத்தை மாற்றியுள்ளீர்கள் என்பது குறித்தும் வங்கியில் புகார் அளிக்க வேண்டும்.


வங்கிகள் ஒருபோதும் தங்கள் வாடிக்கையாளரின் தகவலை யாருக்கும் வழங்குவதில்லை. மேலும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி கணக்கிலிருந்து பணத்தை மாற்ற முடியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பணத்தைப் பெறுபவர் பணத்தைத் திருப்பித் தரத் தயாராக இருக்கிறார். ஆனால் அவர் பணத்தைத் திருப்பித் தர மறுத்தால், நீங்கள் அவர் மீது வழக்குத் தொடரலாம்.


மேலும் படிக்க | Income Tax: 7 அடுக்குகள் கொண்ட வரிவசூல் முறை, முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ