Income Tax: கவலையை விடுங்கள்! வருமான வரியை 100% சேமிக்கலாம்!

Income Tax: வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். இந்நிலையில் உங்கள் வருமான வரி விலக்கை பெறுவது எப்படி என்பதை அறியலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2023, 02:55 PM IST
  • வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் பெற்றிருந்தால், மாதத் தவணையில் ரூ.2 லட்சம் வரை வட்டி தள்ளுபடி கிடைக்கும்.
  • வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரி.
  • உங்கள் வரியைச் சேமிக்கலாம் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Income Tax: கவலையை விடுங்கள்! வருமான வரியை 100% சேமிக்கலாம்! title=

Income Tax : வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். இந்த பட்ஜெட்டில் (பட்ஜெட் 2023), வரி தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடலாம். வரி விலக்கு வரம்பை அதிகரிப்பதைத் தவிர, வரி செலுத்துவோருக்கு புதிய வருமான வரி அடுக்குகளையும் தொடங்கலாம். இதற்கிடையில், நீங்கள் பல வழிகளில் வரி விலக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில், எந்தெந்த வழிகளில் உங்கள் வரியைச் சேமிக்கலாம் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100% நீங்கள் வரியை சேமிக்கலாம்.

வருமான வரியைச் சேமிக்கும் வழிகள்: 

வீட்டுக் கடனில் வரி விலக்கு

நீங்களும் வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் பெற்றிருந்தால், மாதத் தவணையில் ரூ.2 லட்சம் வரை வட்டி தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், வீடு பழுதுபார்ப்பதற்காக ரூ.30,000 வரையிலான கடனில் தள்ளுபடியின் வரி விலக்கு பலனைப் பெறுவீர்கள். வருமான வரியின் 24பி பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | வருமானம் வரி வரம்புக்குள் வந்தாலும் வரி செலுத்த வேண்டாம்: இந்த குட் நியூஸ் தெரியுமா?

NPS முதலீட்டில் வரி விலக்கு

NPS திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் பிரிவு 80CCD (2D)-ன் கீழ் விலக்கு பெறுவார்கள். இந்த விலக்கு அனைத்து வரி அடுக்குகளுக்கும் கிடைக்கும். அடிப்படை சம்பளத்தில் 10% வரை முதலீடு செய்தால் 80C இன் கீழ் தனி நன்மை கிடைக்கும்.

வட்டிக்கு கிடைக்கும் வரி விலக்கு

அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டிக்கான விலக்குப் பலனையும் அடையலாம். நீங்கள் 10,000 ரூபாய்க்கு குறைவாக வட்டி பெறுகிறீர்கள் என்றால், அதற்கும் வரிவிலக்கு பெறலாம். அதே நேரத்தில், 10,000 வட்டிக்கு மேல் பெறுவதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

நன்கொடைகளுக்கு வரி விலக்கு

இது தவிர, நன்கொடைகள் மீதான வரி விலக்கையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நிதிகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம், 100% தொகையில் வரி விலக்கின் பலனைப் பெறுவீர்கள். 80G இன் கீழ் இந்த விலக்கின் பலனைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Budget 2023-ல் நல்ல செய்தி: 10 லட்சம் வருமானத்துக்கு வரி இவ்வளவுதான், மாறுகிறது Tax Slab!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News