Isha Ambani Monthly Income In Tamil: உலகின் மிகப்பெரிய கண்டமே ஆசிய கண்டம்தான். அந்த ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர் யார் என்றால் முகேஷ் அம்பானிதான் என சிறு பிள்ளையும் கூறிவிடும். அத்தகைய முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வை இம்மாத தொடக்கத்தில் அவரது சொந்த ஊரான குஜராத் ஜாம்நாகரில் மூன்று நாள் விழாவாக கோலாகலமாக நடத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில் உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் முதல் பாலிவுட்டையே ஜவான் திரைப்படம் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் அட்லி வரை பல்வேறு பிரபலங்கள் அந்நிகழ்வில் பங்கேற்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வையே இத்தனை பிரபலங்களுடன் கொண்டாடியிருக்கிறார் என்றால் அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது உங்களால் கணக்கிட முடிகிறதா... 


இல்லையென்றாலும் பரவாயில்லை, தெரிந்துகொள்ளுங்கள். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 963 கோடியாகும். முகேஷ் அம்பானி மட்டுமின்றி அவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அவரின் சாம்ராஜயத்தை கட்டிக்காத்து வருகின்றனர் எனலாம். முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானி இணையருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆகும். இதில் ஆகாஷ் அம்பானியும் - இஷா அம்பானியும் இரட்டையர்கள் ஆவார். ஆனந்த் அம்பானி கடைசி வாரிசாகும்.


மேலும் படிக்க | அல்ல அல்ல குறையாத சொத்துகளை வைத்துள்ள ஆனந்த் அம்பானி! மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா?


RRVL சிஇஓ இஷா அம்பானி 


இதில் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு வணிகத்தை கவனித்து வருகிறார். ரிலையின்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை இஷா அம்பானி நிர்வகித்து வருகிறார், அதேபோல் எரிசக்தி சார்ந்த வணிகத்தை ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். இதில், ஆகாஷ், ஆனந்தை போல் இஷா அம்பானியும் முக்கியமானவர்.   


2006ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸால் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (Reliance Retail Ventures Limited - RRVL) நிறுவனத்துக்கு இஷா அம்பானியை தலைமை செயல் அதிகாரி முகேஷ் அம்பானி கடந்த 2002ஆம் ஆண்டு நியமித்தார். 32 வயதான இஷா அம்பானிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 2022ஆம் ஆண்டு நவம்பரில் கிருஷ்ணா, ஆதியா என இரட்டைக் குழந்தை பிறந்தது. 


மாதம் மற்றும் ஆண்டு வருமானம்


இஷா அம்பானி கடந்தாண்டு முக்கியப் பொறுப்பை பெற்ற பின்னர், அதன் மூலம் மட்டும் மாதம் அவருக்கு அதிக வருவாய் வருகிறது. அந்த வகையில் அவரின் மாத வருமானத்தை கேட்டால் நீங்களே அதிர்ச்சியாகிவிடுவார்கள். அவருக்கு ஒரு மாதத்திற்கு ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் மட்டும் ரூ. 35 லட்சம் வருவாயாக வருகிறது என கூறப்படுகிறது. அதேபோல், ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.4.2 கோடி எனவும் கூறப்படுகிறது. 


இஷா அம்பானி சிஇஓ-ஆக இருக்கும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் மதிப்பு மட்டும் 8 ஆயிரத்து 361 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் முதல் நான்கு நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும். தற்போது 18 ஆயிரத்து 500 இடங்களிலும், டிஜிட்டல் தளத்திலும் என பலசரக்கு, எலெக்ட்ரானிக்ஸ், உடைகள் மற்றும் மருந்துகள் என பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ