புதுடெல்லி: ஃபோர்ப்ஸ்-ன் (Forbes) படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டி.யுமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) வியாழக்கிழமை உலக பணக்காரர்களின் வரிசையில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆன பிறகு முதல்முறையாக அவரது நிகர மதிப்பு 88.4 பில்லியன் டாலர் என்ற அளவைக் கடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபோர்ப்ஸின் நிகழ்நேர நிகர மதிப்பு தரவுகளின்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர் அதிகரித்து 88.4 பில்லியன் டாலராக (ரூ. 6.4 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் (Silver Lake) ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் ஒரு பங்கை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து RIL நிறுவனத்தின் பங்குகள் லாபத்தைக் கண்டன. ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு, இப்போது சில்வர் லேக் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் 1.75 சதவீத பங்குகளை ரூ .7,500 கோடிக்கு வாங்கும்.


ALSO READ: Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!


வியாழக்கிழமை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியதும், நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 14.7 லட்சம் கோடியைத் தாண்டியதும் அம்பானி தலைமையிலான RIL பங்குகள் நல்ல அதிகரிப்பைக் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 2 மணி வரை அவரது சொத்து 7.9 பில்லியன் டாலர் அதிகரித்தது. இந்த எழுச்சியின் காரணமாக, தற்போது அவரது நிகர மதிப்பு இப்போது 88.4 பில்லியன் டாலராக உள்ளது.


ஃபோர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானி இப்போது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் முதலாளி எலன் மஸ்க் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே டாப் பாஸ் வாரன் பஃபெட் ஆகியோரை மிஞ்சியுள்ளார்.


அந்த பட்டியலின்படி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நான்காவது இடத்தில் உள்ளார். பில்லியனர் முதலீட்டாளர் பஃபெட் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். மஸ்க் ஏழாவது இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 192.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இன்னும் முதலிடத்தில் உள்ளார். 


பில் கேட்ஸ் 115.6 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ​​பெசோஸ் மற்றும் கேட்ஸின் நிகர மதிப்பு 76.5 பில்லியன் டாலர்களாகும். ஃபோர்ப்ஸின் படி மூன்றாவது பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்.


200 பில்லியன் டாலர் (சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்) சந்தை மூலதனத்தைத் தொட்ட இந்தியாவின் முதல் நிறுவனமாக, RIL இன்று வரலாற்றை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ட்ராடே டிரேடிங்கின் போது, ​​BSE-ல் RIL-ன் பங்குகள் 8.45 சதவீதம் உயர்ந்து 2,343.90 ரூபாய் என்ற அளவில் இதுவரை காணாத உச்சத்தை எட்டின. 


ALSO READ: தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு Retail Sector-ரையும் ஆளப் போகிறார் Mukesh Ambani!!