1st July 2022: இன்று முதல் மாற இருக்கும் 7 முக்கிய விதிகள் என்னென்ன
Changes From 1 july: ஜூலை மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்து, உங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பாக்கெட்டிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஏழு விதிகள் ஜூலை 1, அதாவது இன்று முதல் மாறுகின்றன. அதன்படி கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைகள், ஆதார்-பான் கார்டு இணைப்பு மற்றும் டிமேட் கேஒய்சி போன்றவற்றின் டிடிஎஸ் ஆகியவை இதில் அடங்கும். இதை தவிர, கேஸ் சிலிண்டர் விலையில் திருத்தம் மற்றும் பல மாற்றங்களும் இதில் அடங்கும். இந்த மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்களைப் பாதிக்கும் மற்ற மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆதார் கார்டு-பான் இணைப்புக்கு 1,000 அபராதம்
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஜூன் 30ம் தேதிக்கு முன் இந்த இணைப்பை மேற்கொண்டால் 500 ரூபாய் அபராதம். அதுவே ஜூலை 1ம் தேதிக்கு பின் மேற்கொண்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க |IBPS Clerk 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, நாளை முதல் பதிவு துவக்கம்
டிமேட் கணக்கு செயலிழக்கப்படும்
டிமேட் கணக்குகளுக்கு பெயர், விலாசம், பான், தொலைப்பேசி எண், வருமான விவரம், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை பதிவு செய்ய கொடுக்கப்பட்ட அவகாசம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அந்த விவரங்களை அளிக்காதவர்களின் டிமெட் கணக்கு முடக்கப்படும்.
கிரிப்டோகரன்சிகளில் ஒரு சதவீதம் டிடிஎஸ்
ஜூலை 1 முதல், கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனைகளுக்கு ஒரு சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வருமான வரித்துறையின் கூற்றுப்படி, இது அனைத்து வகையான என்எஃப்டிகள் மற்றும் டிஜிட்டல் நாணயங்களை உள்ளடக்கும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏசி வாங்குவது விலை அதிகம்
ஜூலை 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும். ஹீரோ மோட்டோ கார்ப் விலையை ரூ.3,000 வரை உயர்த்த உள்ளது. மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்த தயாராக உள்ளன. 5 ஸ்டார் ஏசி வாங்குவது 10 சதவீதம் கூடுதல் செலவாகும்.
மருத்துவர்களுக்கான டிடிஎஸ்
மருத்துவர்கள் பெரும் இலவசப் பொருட்கள், மருந்துகள், சமூகவலைத்தளத்தில் பிரபலமானவர்கள் பெறும் இலவசப் பொருட்கல் ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் வரி செலுத்தும் விதி ஜூலை1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 2022 நிதிசட்டத்தில் 194ஆர் என்ற பிரிவு வருமானவரிச்சட்டம் 1961ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20ஆயிரத்துக்கும் அதிகமான பரிசுப் பொருட்களை பெறுவோர் 10 சதவீதம் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம்
ரிசர்வ் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கல் மற்றும் செயல்பாடு குறித்த வழிகாட்டல்கள் 2022 , ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்று வங்கிக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பத்தை அடுத்த 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.500 அபராதமாக கார்டு ரத்து செய்யும்வரை வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் தடை
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1ம்தேதி முதல் தண்டனைக்குரிய குற்றம்.
மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR