சிம் கார்டு விதிகள்: டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில்,  சிம் கார்டுகளை வழங்குவதற்கான செயல்முறை எப்போதும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு பெற்று மோசடி செய்பவர்கள் தங்கள் விருப்பப்படி எந்த எண்ணையும் அணுகி,  மோசடி செய்ய எளிதான வழியாக இருந்தது. ஆனால் டிஜிட்டல் முறைக்கு மாறுவது இது போன்ற முறைகேடுகளின் வாய்ப்புகளை குறைக்கிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இணைய மோசடிகளை தடுக்க, சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி கடினமாக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் செய்யப்பட்டன. ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் எடுக்கிறது என்பதால், இந்த விதிகள் டிசம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது . சிம் கார்டு விதிகளை அமல்ப்செய்ய பலமுறை காலக்கெடு விதிக்கப்ட்டது. எனினும், அந்த நேரத்தில் அவற்றை அமல்படுத்த முடியவில்லை. இருப்பினும், இப்போது சிம் வாங்குவது தொடர்பான இந்த விதிகள் டிசம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.


ஒரு அடையாள அட்டையில் வாங்க கூடிய சிம்களின் எண்ணிக்கை


சிம் கார்டுகள் தொடர்பான விதிகளின்படி, ஒரு ஐடியில் குறைந்த எண்ணிக்கையிலான சிம்களை மட்டுமே வாங்க முடியும். கூடுதல் சிம்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதனால் ஆன்லைன் மோசடியை தவிர்க்கலாம். புதிய விதிகளின்படி, சிம் கார்டு விற்பனையாளர்கள் கணினியில் பதிவுசெய்து சேர்வதற்கு முன் KYC செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக, சிம் கார்டுகளை வழங்குவதில் ஆவண நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், அதனால் ஏற்படும் காகித செலவு அதிகமாக இருப்பதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தன. மேலும், இந்த செயல்முறையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது சிம் மோசடிகளின் நிகழ்வுகளை குறைக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 


ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு ஒரு விரைவான மற்றும் எளிதான செயல்முறை என்று மக்கள் கருதுகின்றனர். இது சில நிமிடங்களில் புதிய சிம் கார்டை பெற உதவுகிறது. மேலும், ஆபரேட்டரால் சில மணிநேரங்களில் சரிபார்ப்பு நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. காகித அடிப்படையிலான சரிபார்ப்பை தெளிவுபடுத்த 24 மணிநேர கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | SIP Calculator: வெறும் ரூ.150 சேமித்து ரூ.22,70,592 பம்பர் லாபம் பெறுவது எப்படி?


விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்


புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு மொத்தமாக சிம் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய விதியின்படி, டெலிகாம் நிறுவனம், விற்பனையாளரை பதிவு செய்யாமல் சிம் விற்க அனுமதித்தால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அனைத்து வியாபாரிகளும் ஒப்பந்தம் மற்றும் உரிமங்களுடன் பதிவு செய்ய வேண்டும். போலி சிம் கார்டுகள் மற்றும் நிதி மோசடிகளை தவிர்க்க அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நாட்டில் சுமார் 10 லட்சம் சிம் கார்டு விற்பனையாளர்கள் உள்ளனர்.


முன்னதாக, சில மாதங்களுக்கு முன் சிம் கார்டு மோசடிகளைத் தடுக்கும் வகையில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு முழுவதும் உள்ள சுமார் 67,000 சிம் கார்டு டீலர்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், மோசடியைத் தடுக்க சிம் கார்டு விற்பனையாளர்களிடம் போலீஸ் சரிபார்ப்பையும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.


மேலும் படிக்க | RBI புதிய வங்கி லாக்கர் விதிகள்: வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம், வங்கிகளுக்கு கெடுபிடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ