UPI பரிவர்த்தனை புதிய விதிகள்: மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது..! NPCI விளக்கம்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற. இதற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் NPCI விளக்கம் கொடுத்துள்ளது.
UPI பரிவர்த்தனை விதிகள்
UPI பரிவர்த்தனைக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. புதிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் விளக்கம் அளித்துள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் UPI மீதான பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விளக்கத்துக்கு முன்னதாக வெளியான அறிக்கையில், ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளுக்கு (பிபிஐ) பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தும்.
மேலும் படிக்க | UPI பணப்பரிவர்த்தனைக்கு வரி...? - பேடிஎம் கொடுத்த முக்கிய அப்டேட்!
NPCI விளக்கம்
வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற PPI-கள் மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்றக் கட்டணம் இருக்கும். ஏப்ரல் 1 முதல் வணிகர் UPI (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்படும் என்று NPCI அறிவித்திருந்தது. அதுவும், 2,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் விதிக்கப்படும் என்றும், பரிமாற்றக் கட்டணம் வெவ்வேறு வகை வணிகர்களுக்கு மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது 0.5% முதல் 1.1% வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
UPI பரிமாற்றத்துக்கு கட்டணம் இல்லை
இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. யுபிஐ பரிவர்த்தனைகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மக்கள் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென விதிக்கப்படும் கட்டண முறை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. இந்நிலையில், இது குறித்து NPCI விளக்கம் கொடுத்திருக்கிறது. அதில் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண நடைமுறைகள், ப்ரீபெய்ட் கட்டண கருவிகள் மூலம் செய்யப்படும் வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண UPI கொடுப்பனவுகளுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
எந்த UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்?
தொலைத்தொடர்பு, கல்வி மற்றும் பயன்பாடுகள்/அஞ்சல் அலுவலகங்களுக்கு பரிமாற்றக் கட்டணம் 0.7% விதிக்கப்படும். பல்பொருள் அங்காடிகளுக்கான கட்டணம் பரிவர்த்தனை 0.9% ஆகும். காப்பீடு, அரசு, பரஸ்பர நிதிகள் மற்றும் ரயில்வேக்கு 1%, எரிபொருளுக்கு 0.5% மற்றும் விவசாயத்திற்கு 0.7 கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
மேலும் படிக்க | வேலையில்லையா? கவலை வேண்டாம்! ஏப்ரல் 1 முதல் உதவித்தொகை வங்கிக்கு வந்துவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ