UPI பணப்பரிவர்த்தனைக்கு வரி...? - பேடிஎம் கொடுத்த முக்கிய அப்டேட்!

Paytm About UPI Transcation: UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் வரும் ஏப். 1ஆம் தேதி மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேடிஎம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2023, 01:42 PM IST
  • நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மீண்டும் விளக்கம்.
  • பேடிஎம் ட்விட்டர் மூலம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
UPI பணப்பரிவர்த்தனைக்கு வரி...? - பேடிஎம் கொடுத்த முக்கிய அப்டேட்! title=

Paytm About UPI Transcation: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India - NPCI) அதன் சமீபத்திய சுற்றறிக்கை ஒன்றில், 'ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (Prepaid Payment Instrument- PPI) கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கும்' என்று அறிவித்தது. 

வதந்தி...!

மேலும்,'ஜீபே, பேடிஎம் மற்றும் பிற ஆப்ஸ் மூலம் செய்யப்படும் UPI பேமெண்ட்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும். இது பரிவர்த்தனை மதிப்பில், 1.1% பரிமாற்றத்தை ஏற்படுத்தும்' என கூறப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஜீபே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்ஸ்களின் பயனர்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வதந்திகளைப் பரப்பத் தொடங்கியதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Post Office FD vs NSC:வரியை சேமிக்க உங்களுக்கு ஏற்ற திட்டம் எது?

பேடிஎம் ட்வீட்

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் பதில் அளித்துள்ளது. அதன் ட்விட்டர் பதிவில்,"அறிவிக்கப்பட்ட பரிமாற்றக் கட்டணம், பொதுவான வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கு அல்லது பேடிஎம் வாலட் மூலம் UPI வழியாக பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் மற்றும் வாலட் இயங்குதன்மை குறித்த NPCI சுற்றறிக்கையைப் பொறுத்தவரை, எந்த வாடிக்கையாளரும் வங்கிக் கணக்கு அல்லது PPI/Paytm Wallet மூலம் UPI வழியாக பணம் செலுத்துவதற்கு எந்தக் கட்டணத்தையும் செலுத்த மாட்டார்கள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். மொபைல் வழி பணப்பரிமாற்றங்கள் நமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்!" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மீண்டும் விளக்கம் 

NPCI இதனை தெளிவுப்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,"ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்கள் (PPI Wallets) ஒன்றோடொன்று இயங்கக்கூடிய UPI சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு NPCI இப்போது, PPI வாலட்களை இயங்கக்கூடிய UPI சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட பரிமாற்றக் கட்டணங்கள் பிபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை, மேலும் வங்கிக் கணக்கில் இருந்து வங்கிக் கணக்கு அடிப்படையிலான UPI கட்டணங்கள் (அதாவது சாதாரண UPI பரிவர்த்தனைகள்) ஆகியவற்றிற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வட்டி விகிதம் அதிகரித்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News