2020-21ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதில், 2020-21 நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது.... 2020-21 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில், ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியின் முதல் தவணை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில், இந்த கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


READ | அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5% ஆக உயரும்: ஃபிட்ச் மதிப்பீடு... 


இதை தொடர்ந்து, சொட்டு நீர் பாசனத்திட்டத்துக்கு மாநிலங்களுக்கு ரூ.4000 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.478.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மூலம் 1.76 ஹெக்டேர் நிலம் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


நிதி விடுவிக்கபட்ட 14 மாநிலங்களில், ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491 கோடியும், அசாம் மாநிலத்திற்கு 631 கோடியும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு 952 கோடியும், கேரளாவிற்கு 1276 கோடியும், மணிப்பூருக்கு 235 கோடியும், மேகாலாய மாநிலத்திற்கு 40 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118 கோடியும், நாகலாந்துக்கு 326 கோடியும், பஞ்சாபுக்கு 638 கோடியும், திரிபுராவுக்கு 269 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 423 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 417 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.