Old Pension Scheme: கடந்த சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் சில முக்கிய விஷயங்களுக்காக தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பெருந்தோற்று காரணமாக நிறுத்தப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை திருப்பி அளிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஃபிட்மெண்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என்பவை அந்த மூன்று கோரிக்கைகள் ஆகும். இவற்றில் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முக்கியமான ஒரு கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
 
பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


பஞ்சாப் மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்கு (State Government Employees) ஒரு பெரிய நிவாரணம் வந்துள்ளது. பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் வேலையில் நியமிக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெறுவார்கள். 


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு


இது தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு நான்கு மாதங்களுக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme) பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது


மேலும் படிக்க | Paytm பயன்படுத்தும் வணிகர்கள் பிற செயலிக்கு மாற வேண்டும்: வர்த்த கூட்டமைப்பு


பஞ்சாப் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்கள் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். நான்கு மாதங்களுக்குள் இந்த ஊழியர்களுக்கு பழைய ஊதத் திட்டத்தின் பலன்களை அளிக்க வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் நியமிக்கப்பட்டனர். எனினும் பின்னர் தான் இவர்கள் முறையான பதவிகளில் சேர்க்கப்பட்டனர். ஆகையால் இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலன்கள் கிடைக்காமல் இருந்தன. 


ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்


தற்போது இது தொடர்பாக உயர் நீதிமன்ற (High Court) உத்தரவு வந்துள்ள நிலையில் இந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.


நான்கு மாதங்களுக்குள் ஊழியர்களுக்கு ஓபிஎஸ் பலன்களை அளிக்க வேண்டும்


ஊழியர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் அது தொடர்பான தனது நிலைப்பாட்டை விலக்கியுள்ளது. இந்த விஷயத்தில் பஞ்சாப் அரசாங்கம் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதி திட்டத்தின் பலன்களை மனுதாரர்கள் அனைவருக்கும் வழங்குமாறு உயர் நீதிமன்றம் பஞ்சாப் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு ஊழியர் 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் நியமிக்கப்பட்டு அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்டிருந்தாலும், அவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.


பஞ்சாப் மாநில ஊழியர்கள்


இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் பல மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூத திட்டத்திற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு பஞ்சாப் மாநில ஊழியர்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.


மேலும் படிக்க | Fixed Deposit: மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான வட்டியை வாரி வழங்கும் வங்கிகளின் லிஸ்ட் இதொ!!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ