தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையை அறிந்து கொள்ள  EPF  அலுவலகம் ஆன்லைன் சேவையை வழங்குகிறது. கொரோனா  தொற்று பரவல் அச்சம் நிலவி வரும் நிலையில், வீட்டில் இருந்த படியே, கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையை, எஸ் எம் எஸ் அனுப்புவதன் மூலமோ அல்லது மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ அல்லது வைப்பு நிதி அலுவலகத்தின் வலை தளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.


ALSO READ | சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..!


1. எஸ் எம் எஸ் மூலம் தொகையை அறிதல்
யுஏஎன் அதாவது யூனிவர்ஸல் அக்கவுண்ட் நம்பர் உள்ளவர்கள் 
7738299899 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்எம் ஸ் அனுப்ப வேண்டும்.  


"EPFOHO UAN LAN" என எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும், இதில் LAN என்பது மொழியை குறிக்கும். உங்களுக்கு தமிழில் எஸ் எம் எஸ் வேண்டும் என்றால்,   "EPFOHO UAN TAM" என எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். 


2. மிஸ்ட் கால் மூலம் அறியும் முறை:


உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் அனுப்பி வைப்பு நிதியில் உள்ள தொகையை அறியலாம். இதற்கு UAN எண்னிற்கு KYC  நடைமுறையின் கீழ், ஆதார் எண், PAN அல்லது வங்கி கணக்கு எண் சரிபார்க்கப் பட்டிருக்க வேண்டும். 


ALSO READ | சீனாவின் Weibo, Baidu செயலிககள் இந்தியாவில் தடை; app stores-ல் இருந்தும் நீக்கம்!!


3. EPFO வலைதளம்


EPFO உறுப்பினர், EPF பாஸ்புக் போர்டலின் மூலம் UAN மற்றும் பாஸ்வேர்டை வைத்து லாக் இன் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் UAN  ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


4. உமங்க் செயலியை பயன்படுத்துதல்


Umang (Unified Mobile Application for New-age Governance) என்னும் செயலி என்பது, இந்தியா முழுவதிலும் உள்ள குடிமக்களுக்கான, மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் நிலையில் சேவை வழங்கும் ஒரே தளமாகும். 
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள EPFO ஆப்ஷனை கிளிக் செய்து வேண்டிய விபரத்தை பெறலாம்.