Rice Price: முதலில் கோதுமை! இப்போது நெல்; தொடர்ந்து குறையும் விளைச்சல்
Rice Price in India: 6 மாநிலங்களில் நெல் விளைச்சல் 100 லட்சம் டன் குறைந்துள்ளது, அரிசி விலை 2 மாதங்களில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அரிசி விலை: நாடு முழுவதும் கோதுமை விலை அதிகரிகரிப்புக்குப் பிறகு, தற்போது அரிசியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அரிசி விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. முன்னதாக டூட்டா பாஸ்மதி அரிசியின் விலை கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனுடன், அனைத்து வகை அரிசியின் விலையிலும் அதிகரிப்பு காணப்படுகின்றது.
அதிகரிக்கும் பாஸ்மதி அரிசியின் விலை
முன்னதாக ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இன்று ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கிலோ ரூ.30க்கு கிடைத்த டூட்டா பாஸ்மதி அரிசி, இன்று கிலோ ரூ.40க்கு குறைவாகக் கிடைப்பதில்லை.
மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்
நெல் விதைப்பு குறைப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு நெல் விதைப்பு பரப்பளவு குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத் தரவுகளின்படி, இந்த ஆண்டு பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் சாகுபடி பரப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால், கடந்த ஆண்டை விட, மொத்த நெல் சாகுபடி பரப்பளவு, 13.3 சதவீதம் குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் கடந்த ஆண்டை விட 37.70 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி குறைந்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 2.6 டன் மகசூலும் சேர்ந்தால், நெல் விளைச்சலில் 100 லட்சம் டன்கள் குறைவு.
2021-22 ஆம் ஆண்டில் அரிசி ஏற்றுமதி 27 சதவீதம் அதிகரித்துள்ளது . இவற்றில் 76 நாடுகள் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளன. மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 2019-20 ஆம் ஆண்டில் 2015 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது, இது 2020-21 இல் 4799 மில்லியன் டாலராகவும், 2021-22 இல் 6115 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி 2021-22 ஆம் ஆண்டில் 27% வளர்ச்சியைப் பதிவுசெய்து 6115 மில்லியன் டாலராக இருந்தது.
அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் சேத்தியா, இந்த ஆண்டு அரிசி ஏற்றுமதி இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். வங்கதேசம் எங்கள் அரிசியின் நிரந்தர வாடிக்கையாளர் அல்ல என்று சேட்டியா கூறுகிறார். அரிசிதான் அங்கு முக்கிய உணவு. ஆனால் அங்கு நெல் விளைச்சல் நன்றாக இருக்கும் போது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில்லை. அங்குள்ள நெல் விளைச்சல் தோல்வியடையும் போது, இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அங்கிருந்து அரிசிக்கு டிமாண்ட் அதிகம் ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கதேச அரசும் அரிசி மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதனால் இந்திய சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்த மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரிசி முக்கிய உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. அரிசி அதிகம் உண்ணப்படும் மாநிலங்களில் அதன் சாகுபடியும் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா இதற்கு விதிவிலக்காகும். இந்த மாநிலங்களில் முக்கிய உணவு ரொட்டி, ஆனால் அதிக பணம் சம்பாதிக்க, அங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடி செய்கிறார்கள். இந்தியாவில் அரிசி உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மற்றும் ஹரியானா ஆகும்.
மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ