கோதுமையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா; உண்மை என்ன

Indian Rice Export: உள்நாட்டு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு, தற்போது அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 29, 2022, 09:22 AM IST
  • கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
  • உலக நாடுகளின் பிரதிபலிப்பு
  • அரிசி ஏற்றுமதியை தடை செய்வது பல நாடுகள் பாதிக்கப்படும்
கோதுமையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா; உண்மை என்ன title=

லகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம் உலக நாடுகளுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் தலைவலியாக மாறியுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரிசி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளில் அரிசி விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. உண்மையில், அண்டை நாடான பங்களாதேஷ் இறக்குமதி வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான வரியை 62.5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துள்ளது. இதில் அரிசியும் அடங்கும்.

இதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி தொடர்ந்து அதிகரித்து வரும் விலையால், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற ஊகங்கள் மீண்டும் வேகம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க | PF பணத்தை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி? எளிய வழிகள்!

பல நாடுகள் பாதிக்கப்படும்
நிதி அமைச்சகத்தின் ஆதாரத்தின்படி, அரிசி ஏற்றுமதியை தடை செய்வது குறித்து அமைச்சகம் உண்மையில் பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியை தடை செய்வது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எனினும், இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதையே அதிகம் நம்பியிருக்கும் நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியில் எந்தக் கட்டுப்பாடும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதில் நேபாளம், பிலிப்பைன்ஸ், கேமரூன் மற்றும் சீனா போன்ற நாடுகள் அடங்கும்.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான ஒரு கட்டத்தை இந்தியா தற்போது கடந்து கொண்டிருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 2008ஆம் ஆண்டு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியைத் தடை செய்தது. இந்த தடையை 2010ல் அரசு நீக்கியது. தற்போது இந்தியாவில் மீண்டும் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதன் காரணமாக மீண்டும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என ஊகங்கள் எழுந்துள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடங்கிய போருக்குப் பிறகு விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மே மாதம் கோதுமை ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தியது. இருப்பினும், அரசின் இந்த முடிவு குறித்து சில நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவின் அரிசி உற்பத்தி 
சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா, 150 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரிசி உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதால், உள்நாட்டில் அரிசி விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

உலக நாடுகளின் பிரதிபலிப்பு 
கோதுமை ஏற்றுமதியை தடை செய்ததற்கு இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும், ஏற்றுமதி தடையை விலக்க வேண்டும் என்று கெஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால் உலகநாடுகளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | பணியாளர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்க வலுக்கும் கோரிக்கை: நிதர்சனம் என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News