Aadhaar PAN Link: ஆதார் - பான் இணைக்க இன்றே கடைசி நாள்
Aadhaar-Pan Link: ஜூன் 30க்குப் பிறகு பான் கார்டை ஆதாருடன் இணைத்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடைகிறது. ஜூன் 30க்குப் பிறகு, பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால், இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு பான் எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியமால் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பணியாளர் ஓய்வூதியத் திட்ட உச்சவரம்பை நீக்க வலுக்கும் கோரிக்கை: நிதர்சனம் என்ன
முன்னதாக மார்ச் மாதத்துக்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், பான்-ஆதார் இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மார்ச் மாத இறுதியில் அறிக்கை வெளியிட்டது.
அந்த வகையில் ஜூன் 30, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு மேற்பட்டு, அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.
உங்கள் பான் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது
* முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in ஐப் பார்வையிடவும்.
* அடுத்தது மெனுவிலிருந்து விரைவான இணைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு, "லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்" என்பதை கிளிக் செய்யவும்.
* பின்னர் வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்
* இதன் மூலம் ஆதார், பான் இணைக்கப்பட்டதா என்ற விவரத்தை திரையில் தெரிவிக்கும்.
ஆதார் பான் எண்ணை எவ்வாறு ஆன்லைன் மூலம் இணைப்பது
* www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்.
* குயிக் லிங்க் பிரிவில், லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
* பின்னர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
* ஆதார் எண்ணில் குறிப்பிட்டபடி பிறந்த தேதி இருந்தால், அங்குள்ள டிக் பாக்ஸில் டிக்செய்து ஆதார் விவரங்களை சரிபார்க்கலாம்.
* கேப்சா எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்
* கடைசியாக லிங்க்-ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்து இணைக்கலாம்
எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி
ஆதாரில் பதிவு செய்த செல்போன் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணக்கு UIDPAN(12இலக்க ஆதார் எண்)(10இலக்க பான் எண்) ஆகியவற்றை பதிவிட்டு அனுப்ப வேண்டும். இதன் மூலம் உங்களின் ஆதாரை பானுடன் இணைத்துக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR