Income Tax: இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட பான் கார்டு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது, இது வருமான வரி செலுத்துபவர்களுக்குக்கான முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது.  இந்த அடையாள ஆவணத்தின் மூலம், வருமான வரித் துறையால் நிர்ணயிக்கப்பட்ட உங்கள் வருமானத்தின் பதிவு எழுத்துப்பூர்வமாக வைக்கப்படுகிறது.  10 இலக்கங்களை கொண்ட இந்த தனிப்பட்ட பயனர்களுக்கான பான் கார்டில் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.  வங்கிக் கணக்கைத் தொடங்க, வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய, திட்டங்களில் முதலீடு செய்ய, முதலீடு செய்யும் போது ஒரு நிபுணரிடம் நிதி ஆலோசனையைப் பெற அல்லது அரசாங்கத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது பான் கார்டு அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Bank FD: உங்க பணம் சீக்கிரமா இரட்டிப்பாகனுமா? இந்த வங்கியில டெபாசிட் செய்யுங்க


 


பான் கார்டை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம், பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  நீண்ட நாட்களாகவே அரசு மக்களை பான்-ஆதார் இணைப்பை செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறது.  பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023, இந்த தேதிக்கு பின்னர் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செயலற்றதாக அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.  தற்போது முதல் மார்ச் 31-ம் தேதி வரை, பான் எண்ணை ஆதாருடன் இணைக்க ரூ.1,000 கட்டணமும் செலுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.



இதுகுறித்து சிபிடிடி தலைவர் கூறுகையில், 'பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது தொடர்பாக பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு, இந்த காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளோம்.  குறிப்பிட்ட நேரத்திற்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால், மார்ச் மாதத்திற்குப் பிறகு அந்த பான் கார்டு செல்லாது மற்றும் அந்த நபர்களுக்கு வரிச்சலுகைகள் எதுவும் கிடைக்காது.  கடந்த ஆண்டு சிபிடிடி வெளியிட்ட அறிக்கையின்படி, பான் கார்டு செயலிழந்தால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விளைவுகளையும் அந்த நபர் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.  பான் கார்டு செயலிழந்து விட்டால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை மற்றும் நிலுவையில் உள்ள ரிட்டன்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.


மேலும் படிக்க | பழைய ரூபாய் தாள்களை வெளிநாட்டினர் இப்போதும் மாற்றிக் கொள்ளலாமா? முக்கிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ