யூபிஐ எனப்படும் யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் சேவையை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  உங்கள் யூபிஐ ஐடியை வைத்து பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.  இதனை பயன்படுத்துவதும் எளிது மற்றும் அலைச்சல் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்ப முடியும்.  இந்த சேவையின் மூலமாக நீங்கள் மளிகை பொருட்கள் வாங்குவது, மின்சார கட்டணம் செலுத்துவது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது போன்ற பல வேலைகளை செய்துகொள்ள முடியும்.  தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(என்பிசிஐ), யூபிஐ மூலமாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்கான வரம்பை விதித்துள்ளது, அதன்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும்.  இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல்வேறு யூபிஐ செயலிகள் மூலம் எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்துகொள்ளலாம் என்பது பற்றி இங்கே காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம்


அமேசான் பே:


அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது.  அதேசமயம் புதிதாக அமேசான் பே பயன்படுத்த தொடங்கியவர்களுக்கு கணக்கை பதிவு செய்த 24 மணிநேரத்தில் ரூ.5000 வரை மட்டுமே முதலில் ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கப்படுகிறது.


கூகுள் பே:


கூகுள் பே செயலியில் ஒரு நாளைக்கு நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியாது.  மேலும் இதில் ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முடியாது.


போன் பே:


போன் பே செயலி உங்களை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது.  ஆனால் இந்த வரம்பு அந்த நபராது வங்கி கணக்கை பொறுத்தது.


பேடியம்:


பேடியம் செயலியில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை ட்ரான்ஸாக்ஷன் செய்யலாம் மற்றும் இந்த செயலி ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 வரை ட்ரான்ஸாக்ஷன் செய்துகொள்ள உங்களை அனுமதிக்கிறது.  மேலும் இதில் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஐந்து தடவை மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 தடவை மட்டுமே ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ள முடியும்.


மேலும் படிக்க | ஜனவரி 2023 முதல் கூகுள் விதிகளில் மாற்றம்: இனி இவர்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்த முடியாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ