யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ்(யூபிஐ) போன்ற டிஜிட்டல் கட்டண முறைகள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த முறைகளில் நாம் எளிதாக இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைவருக்கும் பணத்தை அனுப்ப முடியும். ஒரே ஒரு கியூஆர் கோட் ஸ்கேன் அல்லது நம்பரை உள்ளிட்டால் நொடிப்பொழுதில் பணத்தை விரும்புபவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். பெரிய வணிக வளாகங்கள் முதல் சாலையோர கடைகள் வரை அனைத்து இடங்களிலும் தற்போது யூபிஐ டிரான்ஸாக்ஷன்கள் விரிவாக்கப்பட்டுவிட்டது. யூபிஐ என்பது பாதுகாப்பான கட்டண சேவை தான், இருப்பினும் இதில் நீங்கள் செய்யக்கூடிய சிறு தவறு உங்களுக்கு மிகப்பெரும் நிதியிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு அதன் பின்னர் தவிக்கும் பல பயனர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். இனிமேல் அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்துவிட்டால் நீங்கள் பயப்பட தேவையில்லை, ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது. இதுபோன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு யாருக்கும் பணம் அனுப்பிவிட்டால் உடனே அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகாரளிக்க வேண்டும். பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
தவறான பயனாளியின் கணக்கில் பணத்தை நீங்கள் அனுப்பிவிட்டால் இதுகுறித்து நீங்கள் குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம். உங்கள் குறைகளை தீர்க்க நீங்கள் ரிசர்வ் வங்கியின் ஓம்புட்ஸ்மேனையும் தொடர்பு கொள்ளலாம். பிரிவு 8-ன் கீழ் பயனாளி இழந்த பணத்தை மீட்டுத்தரும் பொருட்டு ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ