Pension and Salary New Rules: அரசு ஊழியர்களுக்கு (மத்திய அரசு) ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெருமளவில் உயர்த்தப் போகிறது. இது மட்டுமா?.. சம்பளம் உயர்வு தொடர்பான செய்தியையும் மத்திய அரசு வெளியிட இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்துள்ளது. இந்த சூழலில் பென்சன் மற்றும் சம்பளம் உயர்வு குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பள உயர்வு எவ்வளவு?


பழைய ஓய்வூதியத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான பெரிய லாட்டரி நடைபெற உள்ளது. குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக அரசு நேரடியாக உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.



மேலும் படிக்க | SSY-PPF திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்! புத்தாண்டில் நற்செய்தி!


PF பங்களிப்பு அதிகரிக்கும்


ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள வரம்பை உயர்த்திய பிறகு, ஓய்வூதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இதற்கு முன், கடந்த 2014ம் ஆண்டு, இந்த வரம்பை அரசு உயர்த்தியது. தற்போது புத்தாண்டில் மீண்டும் ஒருமுறை சம்பளத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சம்பள அதிகரிப்புடன், PF-க்கான பங்களிப்பும் அதிகரிக்கும் அதே நேரத்தில் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.



PF-ன் பங்களிப்பு எவ்வளவு அதிகரிக்கும்?


வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பைப் பற்றி பேசுகையில், குறைந்தபட்ச சம்பளம் ரூ. 15,000 என கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக ரூ. 1250 மட்டுமே இபிஎஸ் கணக்கில் செலுத்த முடியும். அரசு சம்பள வரம்பை உயர்த்தினால், பங்களிப்பும் அதிகரிக்கும். சம்பள உயர்வுக்குப் பிறகு, மாதாந்திர பங்களிப்பு ரூ. 1749 (ரூ. 21,000 இல் 8.33%).


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம், மத்திய அரசு தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ