ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். எந்த விதிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முன்னர் PFRDA விதிகளை தளர்த்தியது
ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) கொரோனா தொற்றுநோய்களின் போது விதிகளை தளர்த்தியது. அதன் கீழ் என்பிஎஸ்-இன் கீழ் தானியங்கி அறிவிப்பு அனுமதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | SSY-PPF திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்! புத்தாண்டில் நற்செய்தி!
நிலைமை இயல்பானதும் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களின் வசதிகளை மனதில் கொண்டு விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது நிலைமை இயல்பாகியுள்ளதால், அரசாங்கத் துறையின் பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகங்கள் மூலமே அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத்திற்கு எதிர்ப்பு
இந்த நேரத்தில் புதிய ஓய்வூதிய முறைக்கு எதிராக நாட்டில் பல வித எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என மாநில ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இல்லை என பல மாநிலங்களின் மத்திய ஊழியர்கள் நம்புகின்றனர். 2004-ம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதியை அளித்து வருமான வரித்துறை சமீபத்தில் வரிவிலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இனி வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, இந்தத் தொகைக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க | EPFO ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: 6 கோடி பேருக்கு நேரடி நன்மை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ