குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்த வங்கிகள் உங்களுக்கு லோன் தருகின்றன!
வங்கிகளில் கடன் வாங்குவது தற்போது எளிதாகி உள்ளது. நிறைய வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் கடன்களை வழங்கி வருகின்றன. இதற்கான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் அவரசமாக பணம் தேவைப்படும்போது யாரிடமும் கடன் கேட்காமல், நேரடியாக வங்கிகளில் தனிநபர் கடன்களை பெறலாம். இந்த கடன்களுக்கு நீங்கள் உத்தரவாதமாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன்களை போட்டி போட்டுக் கொண்டு வழங்க முயற்சிக்கின்றனர். சில சமயங்களில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் பர்சனல் லோன் வேண்டுமா என்று கால் செய்தும் கேட்கின்றனர். பர்சனல் லோன் பெறுவது ஈசியாக இருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கு வீடு அல்லது கார் போன்ற எந்த ஒரு பொருளையும் அடகு வைக்க தேவையில்லை. அதற்குப் பதிலாக, பணத்தை திருப்பி செலுத்துவதில் ஒருவர் எவ்வளவு சிறந்தவராக இருக்கிறார் என்பதை காட்டும் கிரெடிட் ஸ்கோரை நல்ல படியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனை தான் வங்கிகள் முதலில் செக் செய்கின்றன. கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதிக கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும். இதை பற்றி கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எளிதாக பர்சனல் லோன் தரும் வங்கிகள்:
ஐசிஐசிஐ வங்கி தனிநபர் கடன்களை வழங்குகின்றன. 50 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன்களை பெற முடியும். மேலும் இதனை 6 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தும் விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு 10.85% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை உங்களது மாத வருமானம் முடிவு செய்யும்.
HDFC வங்கி உங்களுக்கு 40 லட்சம் வரை கடன் தருகிறது. இந்த பணத்தை நீங்கள் 6 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். 10.85% முதல் வட்டி விகிதம் தொடங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு 40 லட்சம் வரை கடன் தருகிறது. இந்த கடனை நீங்கள் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 10.99% முதல் வட்டி விகிதம் தொடங்குகிறது.
IndusInd வங்கி 50 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடனை வழங்குகிறது. இந்த கடனை நீங்கள் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 10.49% முதல் வட்டி விகிதம் தொடங்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை வழங்குகிறது. இதற்கு 11.45 சதவிகிதம் வட்டியை வசூலிக்கின்றன.
ஆக்சிஸ் வங்கி 10 லட்சம் வரை தனி நபர் கடன் வழங்குகின்றன. நீங்கள் அதை 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். இந்த வாங்கி 11.25 சதவீதம் வட்டியை வசூலிக்கிறது.
நீங்கள் வங்கியில் கடன் வாங்க விரும்பினால், நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டும் அல்லது சுய தொழில் செய்ய வேண்டும். உங்களது ஆண்டு வருமானம் மற்றும் இதற்கு முன்பு கடன் வரலாறு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. வாங்கிய கடனை குறிப்பிட்ட தேதிகளுக்குள் திருப்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டி இருக்கும். எனவே அவசர தேவைகளுக்கு கடன் வாங்கும் முன்பு திருப்பி செலுத்த முடியுமா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்காக கடன் வாங்கினால், அது பிற்காலத்தில் உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, கடன் வாங்குவதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள்.
மேலும் படிக்க | புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ