7th Pay Commission: சமீபதில், சில வாரங்களாக டிஏ நிலுவைத் தொகை பற்றிய பேச்சு பரவலாக உள்ளது. பல ஊடக அறிக்கைகளில் இது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
7th Pay Commission, DA Arrears: 18 மாத டிஏ அரியர் குறித்து தற்போது ஒரு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. 2025 பிப்ரவரியில் நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசு அறிவிக்கும் என உறுதியாகக் கருதப்படுவதாக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலுவைத் தொகையை தகுதியான ஊழியர்களின் கணக்கில் மூன்று தவணைகளாக அரசு டெபாசிட் செய்யும் என்றும் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 18 மாத டிஏ அரியர் தொகைக்காக காத்திருக்கிறார்கள். டிஏ அரியர் கிடைக்குமா கிடைக்காதா? சமீபத்திய அப்டேட் என்ன? இந்த பதிவில் விரிவாக காணலாம்.
7வது ஊதியக் குழு: சமீபதில் சில வாரங்களாக டிஏ நிலுவைத் தொகை பற்றிய பேச்சு பரவலாக உள்ளது. பல ஊடக அறிக்கைகளில் இது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. முதலில் அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது என காணலாம்.
கொரோனா தொற்றுநோய் உலகை ஆட்கொண்டபோது உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை உருவானது. அனைத்து நாடுகளும் பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டன. இந்தியாவும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த புற்றுநோய் காரணமாக பலவித சவால்களை அரசாங்கம் எதிர்கொண்டது.
நிதி நெருக்கடியை சமாளிக்க பலவித நடவடிக்கைகளை அரசு எடுத்தது. அதில் ஒரு பகுதியாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அந்தத் தொகை அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
ஜூலை 2020 முதல் டிசம்பர் 2021 வரையிலான 18 மாதங்களுக்கு அகவிலைப்படி முடக்கம் இருந்தது. அதன் பிறகு நிலைமை சற்று சரியான உடன் முடக்கம் நீக்கப்பட்டது. எனினும் முடக்கப்பட்ட காலத்திற்கான டிஏ நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது பொருளாதார நிலை சற்று சீராக இருப்பதாகவும், இப்போது 18 மாத டிஏ அரியர் தொகையை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் ஊழியர் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து தற்போது ஒரு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. 2025 பிப்ரவரியில் நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசு அறிவிக்கும் என உறுதியாகக் கருதப்படுவதாக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலுவைத் தொகையை தகுதியான ஊழியர்களின் கணக்கில் மூன்று தவணைகளாக அரசு டெபாசிட் செய்யும் என்றும் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
எனினும், டிஏ அரியர் தொகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எப்படியும் பிப்ரவரி மாத பட்ஜெட்டில் இது குறித்த தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.