Personal Loan: இந்தியர்கள் பலரும் எதிர்பாராத செலவினங்களுக்காக தனிநபர் கடனைப் பெறுகின்றனர்.  தனிநபர் கடன்கள் உயர்கல்வி, பயணம், திருமணங்கள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் போன்ற திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத செலவுகள் போன்றவற்றை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது. தனிநபர் கடன் பெற வேண்டுமானால் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  உங்களின் சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் உங்களுக்கு கடன் வழங்குவார்.  தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் ஏதேனும் கடன்கள் நிலுவையில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.  இதில் வீட்டுக் கடன்கள், இரு சக்கர வாகனம் அல்லது கார் கடன்கள் அல்லது வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்து கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.  பெரும்பான்மையான வங்கிகள் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கடனை வழங்கும், கடன் பெறுவதற்கான அதிகபட்ச வயது 58 ஆகும்.  தனிநபர் கடனை பெறும்போது நீங்கள் அதற்கு சில முக்கியமான கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும், அந்த கட்டணங்களை பற்றி பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமேசானின் பம்பர் ஆஃபர்...! ரூ.7000க்கும் குறைவான விலையில் சாம்சங்க் மொபைல்


1) முன்கூட்டியே செலுத்துதல் என்பது கடனாளி ஒரு கடனை அதன் நிலுவைத் தேதிக்கு முன் திருப்பிச் செலுத்துவதற்காக கடனாளிக்கு செலுத்த வேண்டிய கட்டணமாகும். கடனின் வகை, நிலுவையில் உள்ள கடன் தொகை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரத்தைப் பொறுத்து இந்த அபராதத் தொகை மாறுபடலாம்.  எனவே கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்னர் அந்த பத்திரத்தை கவனமாகப் படித்து, இந்த அபராதங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்.


2) அனைத்து விதமான சேவைகளுக்கும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  தனிநபர் கடன் பெறுபவர்கள் இதற்கு ஜிஎஸ்டி வரி வடிவில் சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.  கடனுக்கு ஒப்புதல் பெறும்போதோ அல்லது அதனை திருப்பிச் செலுத்தும்போதோ இது வசூலிக்கப்படும்.


3) தனிநபர் கடனை நாம் வாங்கிய பிறகு அந்த கடன் தொகையை இஎம்ஐ வடிவில் தவணையாக செலுத்தி வருகிறோம்.  கடனளிப்பவர் ஒப்பந்தத்தின் தொடக்கத்தில் தனிநபர் கடனில் காலாண்டு/வருடாந்திர இஎம்ஐ-ஐ அமைக்கின்றனர்.  இந்த ஒப்பந்தத்தின்படி, நீங்கள் இஎம்ஐ செலுத்த தவறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம், எனவே உங்களால் செலுத்த முடிந்த அளவு இஎம்ஐ தொகையை தேர்ந்தெடுப்பது நல்லது.


4) தனிநபர் கடன்களுக்கான சரிபார்ப்புக் கட்டணங்கள் என்பது கடன் விண்ணப்பத்தில் கடன் வாங்கியவர் வழங்கிய தனிப்பட்ட மற்றும் நிதித் தகவலைச் சரிபார்ப்பதற்காக கடன் வழங்குபவர் ஒருமுறை செலுத்தும் கட்டணத்தைக் குறிக்கிறது.  எனவே நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தைக் கண்டறிய வேண்டுமென்றால், வெவ்வேறு கடன் வழங்குபவர்களால் விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது.


5) கடன் செயலாக்கக் கட்டணம் என்பது கடன் விண்ணப்பத்தை செயலாக்க வங்கியால் கடன் வாங்குபவரிடம் இருந்து வசூலிக்கப்படும் ஒரு அடிப்படைக் கட்டணமாகும்.  இந்தக் கட்டணங்களில் விண்ணப்பச் செயலாக்கம், ஆவணங்கள், கடன் மதிப்பீடு, சட்டச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகியவை அடங்கும்.  வங்கிக்கு வங்கி இந்த செயலாக்க கட்டணம் மாறுபடும்.


மேலும் படிக்க | IRDAI: கிரெடிட் கார்ட் புதிய விதிகள்! இனி இந்த சேவைக்கு பயன்படுத்த முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ