பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் (பிஎம்-கிசான்) கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.  இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று மாத தவணையாக தலா ரூ.2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.  இதன்மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர், இப்படி பலரும் பலன் பெற்று வரும் நிலையில் சில விவசாயிகள் இந்த பிஎம் கிசான் திட்டத்திற்கு தகுதி பெறாமல் இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த அக்டோபர் 17-ம் தேதியன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (பிஎம்-கிசான்) 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார், பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற தகுதியான விவசாயிகளில் சிலருக்கும் இந்த 12வது தவணையான ரூ.2000 கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருப்பதாக சில செய்திகள் கூறுகிறது, அப்படி கணக்கில் ரூ. 2000 தொகையை பெறாத விவசாயிகள் அதுகுறித்த புகாரை PM Kisan Helpdesk-ல் பதிவு செய்யலாம்.  இந்த தளத்தில் நீங்கள் வேலைநாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை புகாரை பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் சில தகவல்களின்படி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 12வது தவணை தொகையானது விவசாயிகளின் கணக்கில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  அதனால் இதுவரை பணம் பெறாத விவசாயிகள் அந்த தேதி வரை காத்திருந்து பார்க்கலாம், அப்படியும் பணம் கணக்கில் வரவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்.



மேலும் படிக்க | PF balance சரிபார்ப்பு: இபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்


இகேஒய்சி, தகுதி, நில விதைப்பு போன்ற சில காரணங்களாலும் உங்களது தவணை தொகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.  உங்கள் புகார்களை பதிவு செய்ய pmkisan-ict@gov.in என்கிற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் அல்லது 011-24300606 என்கிற உதவி எண்ணுக்கும் அழைக்கலாம்.  மேலும் பின்வரும் தொலைபேசி எண்களுக்கும் டயல் செய்து புகார்களை தெரிவிக்கலாம்,


1) PM கிசான் கட்டணமில்லா எண்: 18001155266


2) PM கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261


3) PM கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011-23381092, 23382401


4) PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606


5) PM கிசானின் மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109


மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ