Farmers Of Rajasthan To Get ₹ 8000 Kisan Samman Nidhi : கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது இந்திய விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கிசான் சம்மான் நிதியை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியாக, கிசான் சம்மன் நிதி ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ரூ.2000 அளவில் பிரதமர் கிசான் சம்மான் நிதியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தானின் பயனாளி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாநில அரசால் டெபாசிட் செய்யப்படும்.


மேலும் படிக்க | வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?


ராஜஸ்தானில் கிசான் சம்மான் நிதி அதிகரிப்பு


தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், ராஜஸ்தானின் பாஜக அரசு விவசாயிகளுக்கு பெரும் பரிசை வழங்கியுள்ளது. தற்போது மாநில விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி ரூ.8000 வழங்கப்படும் என முதல்வர் பஜன் லால் சர்மா சமூக வலைதளமான X இல் தெரிவித்துள்ளார்.



ராஜஸ்தான் விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக வந்திருக்கும் இந்த நிதி உயர்வு, பிற மாநில விவசாயிகளின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, ராஜஸ்தானின் விவசாயிகளுக்கு ராஜஸ்தானின் பாஜக அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மூன்றே நாளில் இரட்டிப்பான நிலத்தின் மதிப்பு...


கிசான் சம்மன் நிதி ரூ.8000 ஆக உயர்வு


4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக மொத்தம் ஆறாயிரம் ரூபாயை அரசு டெபாசிட் செய்கிறது. இந்த சூழ்நிலையில், இப்போது மாநில அரசு ரூ.2000 கொடுப்பதாக அறிவித்திருப்பதை அடுத்து, ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.8000 கிடைக்கும். இந்த உயர்வால் ராஜஸ்தான் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1300 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.


இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, 'விவசாயிக்கு பலம்! முதல்வர் பஜன் லால் சர்மா, பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பணி செய்து வருகிறார். அதேபோல், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க, மாநிலத்தில் சம்மன் நிதி 2000 ரூபாய் அதிகரித்து, ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ