PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

PF Withdrawal: ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2024, 01:08 PM IST
  • ஆன்லைனில் பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி?
  • ஆஃப்லைனில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி?
  • உமங் செயலி மூலம் பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி?
PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி? title=

PF Withdrawal: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு இலவச ஓய்வூதிய பலனையும் பெறுகிறார்கள். 

ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் (EPF Account) ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இப்படி ஒவ்வொரு மாதமும், ஊழியர்கள் சம்பளம் பெற்ற பின்னர், இரண்டு மடங்கு தொகை ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் பிஃஎப் தொகையாக டெபாசிட் செய்யப்படுகின்றது. 

இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசாங்கம் தற்போது 8.15 சதவிகித வட்டியை அளிக்கின்றது. இதனுடன் பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகை பணியாளருக்கு கிடைக்கும். எனினும், பணி ஓய்வுக்கு பிறகுதான் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும் என்பதில்லை. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலும் இபிஎஃப் தொகையை பாதியிலேயே எடுக்க முடியும். 

பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? 

இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் எடுக்கலாம். ஆன்லைனில், EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிப்பதன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலம் தொகையைப் பெற EPFO ​​இன் கிளைக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 20 நாட்களுக்குப் பிறகு தொகை உங்களுக்கு அனுப்பப்படும்.

ஆன்லைனில் பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி? 

- முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வெண்டும். 

- அடுத்ததாக உங்களது UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து OTP இன் சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும்

- அதன் பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு அடையாள உறுதிப்படுத்தல் செயல்முறையை முடிக்க வேண்டும்

- இதற்குப் பிறகு, கணக்குத் தகவலை உறுதிப்படுத்தி செயல்முறையை தொடர வேண்டும்

- இப்போது இங்கே நீங்கள் PF ஐப் பெறுவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள், அதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்

- இந்த வழியில், நீங்கள் எளிதாக கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்

பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி? 

இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஆஃப்லைன் மூலம் PF பணத்தைப் பெற விரும்பினால், இதற்காக அவர்கள் அதன் அதிகாரப்பூர்வ கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு நிறுவனத்திடமிருந்து பணியாளரின் கூட்டுப் படிவத்தை வாங்கி, அனைத்து முக்கிய ஆவணங்களையும் கவனமாக பூர்த்தி செய்து உங்கள் ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு PF தொகை 20 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 

உமங் செயலி மூலம் பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி? 

- முதலில் உமங் செயலியை (Umang App) உங்கள் போனில் டவுன்லோட் செய்து லாக் இன் செய்ய வேண்டும்.

- இப்போது Services என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்து, EPF விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தொடர வேண்டும்.

- பின்னர் PF claim விருப்பத்தை கிளிக் செய்து UN எண்ணை உள்ளிட்டு OTP உதவியுடன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

- தேவையான அனைத்து தகவல்களையும் கவனமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க | SBI வங்கியின் அற்புதமான திட்டம் : 400 நாட்களில் நீங்கள் பணக்காரராகலாம்..! லோன் வசதியும் உண்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News