நரேந்திர மோடி அரசு மக்களுக்கு காப்பீட்டு நன்மையை வழங்கும் வகையில் 2015ம் ஆண்டில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.  எஸ்பிஐ அல்லது வேறு ஏதேனும் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் பங்களிக்க தகுதியுடையவர்கள்.  காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால் இந்த காப்பீடு ரூ.2 லட்சம்  வரை ரிஸ்க் கவரேஜை வழங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பது எப்படி?



காப்பீட்டுதாரர் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே 31 அல்லது அதற்கு முன் ஆண்டு பிரீமியமாக ரூ.436 வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவை உங்களால் தொடர முடியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வருடாந்திர ஆட்டோ டெபிட் செயல்முறையை ரத்துசெய்யலாம்.  இதைச் செய்ய PMJJBY திட்டத்துடன் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைக்கு நீங்கள் செல்ல வேண்டும்.  தேவையான படிகளைச் செய்துவிட்டு PMJJBY பிரீமியம் கட்டணத்தை நிறுத்தும்படி கேட்கலாம்.


சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், உங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும்.  உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாவிட்டாலும்  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரத்து செய்யப்படும்.


மேலும் படிக்க | 8th Pay Commission மெகா அப்டேட்: விரைவில் வருகிறது 44% ஊதிய உயர்வு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ