அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது, இதுபோன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலம் வயதான காலத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக்கொள்ள முடியும்.  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாதந்தோறும் சிறப்பான வருமானத்தை பெற அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூ 18500 ஓய்வூதியமாக பெற்று பலனடைய முடியும்.  இந்த திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!


60 வயது ஆனவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை முதலீடு செய்யலாம், இந்த திட்டம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ளது.  இந்த திட்டத்தில் அதிகபட்ச வயது வரம்பு இல்லை, இதில் முதலீட்டாளர்கள் பணத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.  PMVVY திட்டத்தில் நீங்கல் மாதந்தோறும் குறைந்தபட்சமாக ரூ 1000 செலுத்தினால், உங்களுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக ஓய்வூதியம் ரூ 9250 கிடைக்கும்.  



இத்திட்டத்தின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658.  இத்திட்டத்தின் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும்.  இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதம் மாதந்தோறும் 7.40% pa ஆக இருக்கும்.


மேலும் படிக்க |  இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ