புதுடெல்லி: 3,688 கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கில் (Punjab National Bank) அண்மையில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Dewan Housing Finance Limited (DHFL)) வாராக்கடனில் (NPA) 3,688.58 கோடி ரூபாய் அளவிலான மோசடி குறித்து ரிசர்வ் வங்கிக்கு (RBI) தகவல் கொடுத்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. பல போலி நிறுவனங்கள் மூலம் மொத்தம் 97,000 கோடி ரூபாய் வங்கி கடன்களை வாங்கிய DHFL நிறுவனம், அதில் 31,000 கோடி  ரூபாய் அளவிலான மோசடி செய்திருப்பதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தற்போது விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் 1,246.58 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கான ஏற்பாட்டை வங்கி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில், ரிசர்வ் வங்கி, கடன் தீர்வுக்காக என்.சி.எல்.டி எனப்படும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு (National Company Law Tribunal) டி.எச்.எஃப்.எல் வீட்டுக் கடன் நிறுவனத்தை கொண்டு சென்றது.  இந்த தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட முதல் நிதி சேவை நிறுவனம் என்.சி.எல்.டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் விதிமுறைகள் மீறியதாக தகவல்கள் வெளியான பிறகு, SFIO உட்பட பல்வேறு நிறுவனங்கள் விசாரணைகளைத் தொடங்கின.


Read Also | Jet Airways விளம்பரதாரர் நரேஷ் கோயல் மீது பணமோசடி வழக்கு பதிவு: ED


டி.எச்.எஃப்.எல் வழக்கு விவரம் என்ன?


Bankruptcy court, அதாவது திவால்நிலை தொடர்பான வழக்குகளுக்கான பிரத்யேக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நாட்டின் முதல் நிதி நிறுவனம் டி.எச்.எஃப்.எல். இதன் மொத்த கடன் 85,000 கோடி ரூபாய்க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவகரான கபில் வாதவன் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களின் நிலை என்னவாகும்? 


தற்போதைய நடவடிக்கைகளால் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், வங்கியின் பங்கு மதிப்புகள் குறையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படலாம்.