Best Post office Investment Schemes: பாதுகாப்பான முதலீடு என்று வரும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது, அரசு சார்ந்த திட்டங்கள், பொதுத்துறை வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் செய்யப்படும் முதலீடு ஆகியவைதான். இவற்றில் முதலீடு செய்வதால், பாடுபட்டு சேர்த்த நமது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, வருமானமும் சிறப்பாக கிடைக்கும். சில திட்டங்களுக்கு, வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் விலக்கு கிடைக்காது. என்றாலும், இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அந்த வகையில், வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் சில திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் அலுவலகத்தின் 5 சிறந்த திட்டங்கள்


மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்


பெண்களுக்கான பிரத்தியேக திட்டமான மகிலா சம்மா சேமிப்பு சான்றிதழ், இந்திய அரசால் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட சிறு சேமிப்பு திட்டமாகும். பொருளாதார ரீதியாக பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக ஆக்குவதற்கும், பெண்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கம் மற்றும் முதலீடு செய்யும் பழக்கத்தை (Investment Tips) ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், வருமான வரி சலுகைகள் எதுவும் கிடையாது. மேலும் வருமான வரி வரம்பில் வருபவர்கள், இதில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். பெண்கள் யார் வேண்டுமானாலும் இதனை தொடக்கலாம். இதில் இரண்டு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். திட்டத்திற்கு அரசு 7.5% வட்டி கொடுக்கிறது


தபால் அலுவலக​ தொடர் வைப்பு திட்டம்


தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டமான இதில், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் முறையே 6.9%, 7. 0 சதவீதம், 7.1% ஆகும். எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு செய்யப்படும் தொடர் பைப்பு முதலீடுகளுக்கு வரிச் சலுகை பெறலாம். ஆனால் ஒரு வருடம் இரண்டு வருடம், அல்லது மூன்று வருட காலத்திற்கு முதலீடு செய்யும் போது வரிசையில் கிடைக்காது


தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம்


தபால் அலுவலகத்தின் மற்றொரு சிறப்பு திட்டமான இதற்கு 6.7 சதவீத உத்தரவாத வருமானம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் வரை, இதற்கான லாக்கின் பீரியட் ஆகும். தனிநபர், அல்லது கூட்டாக சேர்ந்து அதிகபட்சம் மூன்று பேர் இந்த கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.


மேலும் படிக்க | விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?


கிசான் விகாஸ் பத்திரம்


கிசான் விகாஸ் பத்திரத்தில், செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது. மேலும் இதில் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இந்த முதலீட்டுக்கான வட்டி ஆண்டுதோறும் கிடைக்கும்.


தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்


வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு, இந்தத் திட்டம் வரப் பிரசாதம் எனலாம். இந்த திட்டத்தில் தனிநபர் அதிகபட்சமாக ரூபாய் ஒன்பது லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டாக தொடங்கும் போது, 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு, வரி விதிக்கப்படும். இந்த திட்டத்திற்கு வருமான வரி என்பது சி என்று வரிச்சலுகை கிடைக்காது. அரசு, இதில் செய்யப்படும் முதலீட்டிற்கு 7.4 சதவீத வட்டி கொடுக்கிறது.


மேலும் படிக்க | ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ