Post Office New Rules: தபால் அலுவலக வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. இந்திய தபால் துறை வழங்கும் இந்த முதலீட்டுத் திட்டங்கள் உத்தரவாதமான வருவாயுடன் வருகின்றன. மேலும் அவற்றில் எந்தவிதமான அபாயமும் இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் 6.80 - 7.50 சதவீதத்தில் மாறுபடும். இது முதலீட்டாளர்களுக்கு நிலையான வளர்ச்சியை வழங்குகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் ஒரு பிரிவான தேசிய சேமிப்பு நிறுவனம், இந்திய அஞ்சல் வழங்கும் இந்தத் திட்டங்களை நிர்வகிக்கிறது. 


அந்த வகையில், தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அதன் தொடர்பான மூன்று முக்கிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. புதிய மாற்றங்களில், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரும்பப் பெறுதல் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான விதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு.. இலவச கோதுமையுடன் இத்தனை வசதிகள் கிடைக்குமா?


கூட்டு கணக்கு


தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வரம்பு உயர்வில் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. விதிகளின்படி, இதுவரை அதிகபட்சமாக இருவர் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்த நிலையில், தற்போது அது மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது 3 பேர் இணைந்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.


பணத்தை திரும்பப் பெறும் விதி


அஞ்சலக சேமிப்புக் கணக்கு திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாற்றும் படிவம் 2ல் இருந்து படிவம் 3க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தால் பாஸ்புக்கைக் காட்டி கணக்கில் இருந்து குறைந்தது ஐம்பது ரூபாய் எடுக்கலாம். அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டம் 2019இன் படி, கணக்கில் இருந்து குறைந்தது ஐம்பது ரூபாயை எடுக்க, படிவம்-2 உடன் முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது முதல் விதி.


வைப்புத்தொகைக்கான வட்டி செலுத்தும் விதிகள்


அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை செலுத்தும் விதி தொடர்பான புதிய விதிகளின்படி, பத்தாவது நாள் மற்றும் மாத இறுதிக்குள் ஒரு கணக்கில் குறைந்த தொகைக்கு ஆண்டுக்கு 4% வட்டி அனுமதிக்கப்படும். கணக்கீடு செய்த பிறகு, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அது கணக்கில் வரவு வைக்கப்படும். அதே சமயம், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவரது கணக்கில் வட்டி செலுத்தப்படும்.


மேலும் படிக்க | 60 வயசுக்காரங்களுக்கு குட் நியூஸ்! வங்கி டெபாசிட்களுக்கு 9% வட்டி தரும் வங்கிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ