Post Office Recurring Deposit Scheme: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. கடுமையாக உழைத்து நாம் ஈட்டும் செல்வத்தை  பாதுகாக்கவும் பெருக்கவும் நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். இதற்கான பல திட்டங்களும் உள்ளன. வயோதிகம், வாழ்க்கையின் அத்தியாவசிய செலவுகள், எதிர்பாராத செலவுகள் என பணத்திற்கான தேவை வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்


அதிக வருமானம் அளிக்கக்கூடிய குறைந்த அபாயம் கொண்ட திட்டங்களையே பெரும்பாலான முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரே நேரத்தில் பெரிய நிதியை முதலீடு செய்வது சாதியம் இல்லாத ஒன்று. ஏனெனில் குடும்பத்தில் உள்ள பலவிதமான செலவுகளுக்குப் பிறகு மாதா மாதம் கையில் மிஞ்சும் தொகை மிக சிறியதாகவே இருக்கும். இந்த சிறிய தொகையை சேமித்தாலும் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தொடர் வைப்பு அதாவது ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.


ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமித்து அதை ரெக்கரிங் டெபாசிட் (Recurring Deposit) திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாதுகாப்பான திட்டமாகவும் நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டமாகவும் இது கருதப்படுகின்றது. இதில் நாம் மாதாமாதம் சேமிக்கும் தொகை சிறிதாக இருந்தாலும் திட்ட முதிர்ச்சியில் நமக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். 


போஸ்ட் ஆபீஸ் ஆர்டி திட்டத்தில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?


தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டத்தில் (Post Office RD Sceme) 6.7% வட்டி கிடைக்கிறது. தபால் அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான ஆர்டி (RD) வசதி கிடைக்கிறது. இதில் குறைந்தபட்சமாக நூறு ரூபாய் முதல் நாம் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு கிடையாது.


திட்ட முடிவில் கிடைக்கும் தொகை எவ்வளவு?


இந்தத் திட்டத்தில் மாதா மாதம் 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் அல்லது 5000 ரூபாயை முதலீடு செய்தால், திட்டம் முடியும்போது எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பற்றி இங்கே காணலாம்.


ரூ. 1000 ஆர்டி செய்தால் கிடைக்கும் வருமானம்


- அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு திட்டத்தில் மாதா மாதம் ரூ. 1000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் உங்கள் கணக்கில் ரூ. 12,000 சேரும்.


- அந்த வகையில் ஐந்தாண்டுகளில் ரூ. 60,000 முதலீடு செய்வீர்கள்.


- இதன் வட்டி விகிதத்தை (Interest Rate) 6.7 சதவீதமாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 11,366 கிடைக்கும்.


- மொத்தத்தில் திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ. 71,366 கிடைக்கும்.


ரூ. 2000 ஆர்டி செய்தால் கிடைக்கும் வருமானம்


- இந்த திட்டத்தில் மாதா மாதம் ரூ. 2000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் உங்கள் கணக்கில் ரூ. 24,000 சேரும்.


- ஐந்தாண்டுகளில் ரூ. 1,20,000 முதலீடு செய்வீர்கள்.


- இதன் வட்டி விகிதத்தை (Interest Rate) 6.7 சதவீதமாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 22,732 கிடைக்கும்.


- திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ. 1,42,373 கிடைக்கும்.


மேலும் படிக்க | Bank Holidays in 2024 March: மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்... முழு பட்டியல் இதோ


ரூ. 3000 ஆர்டி செய்தால் கிடைக்கும் வருமானம்


- மாதா மாதம் ரூ. 3000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் உங்கள் கணக்கில் ரூ. 36,000 சேரும்.


- ஐந்தாண்டுகளில் ரூ. 1,80,000 முதலீடு செய்வீர்கள்.


- இதன் வட்டி விகிதத்தை (Interest Rate) 6.7 சதவீதமாக கணக்கிட்டால், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 34,097 கிடைக்கும்.


- திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ. 2,14,097 கிடைக்கும்.


ரூ. 4000 ஆர்டி செய்தால் கிடைக்கும் வருமானம்


- மாதா மாதம் ரூ. 4000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் உங்கள் கணக்கில் ரூ. 48,000 சேரும்.


- அந்த வகையில் ஐந்தாண்டுகளில் ரூ. 2,40,000 முதலீடு செய்வீர்கள்.


- 6.7 சதவீத வட்டியில், 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 45,463 கிடைக்கும்.


- திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ. 2,85,463 கிடைக்கும்.


ரூ. 5000 ஆர்டி செய்தால் கிடைக்கும் வருமானம்


- அஞ்சல் அலுவலக ஆர்டி திட்டத்தில் மாதா மாதம் ரூ. 5000 முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் உங்கள் கணக்கில் ரூ. 60,000சேரும்.


- அந்த வகையில் ஐந்தாண்டுகளில் ரூ. 3,00,000 முதலீடு செய்வீர்கள்.


- 5 ஆண்டுகளில் வட்டியில் மட்டுமே, ரூ. 56,829 கிடைக்கும்.


- மொத்தத்தில் திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக ரூ. 3,56,829 கிடைக்கும்.


இந்த திட்டத்தில் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஓராண்டு காலம் செயல்பாட்டில் உள்ள கணக்குகளில், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெற முடியும். எனினும், கடனுக்கான வட்டி விகிதம் திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம்.


மேலும் படிக்க | கையில் ரூ.10,000 இருக்கா? ‘இந்த’ தொழில்களை ஆரம்பித்தால் செம வருமானம் வரும்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ