Bank Holidays in 2024 March: மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்... முழு பட்டியல் இதோ

Bank Holidays in 2024 March: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2024, 10:14 PM IST
Bank Holidays in 2024 March: மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்... முழு பட்டியல் இதோ title=

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும். வாடிக்கையாளர்கள், தேவையில்லாமல் வங்கிக்குச் சென்று, வீண் அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்க, இந்த இந்த பட்டியல் மூலம் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றாலும், சில விஷயங்களுக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வங்கி விடுமுறையை பொறுத்தவரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தேசிய விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். அதே போன்று மாநிலங்களுக்கான சில தனிப்பட்ட விடுமுறைகளும் உண்டு. அந்தந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள், அல்லது விழாக்கள் அடிப்படையில் இந்த விடுமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. வங்கி விடுமுறைகள் இரண்டு வகைப்படும். முதல் வகை அரசு விடுமுறை நாட்கள், இரண்டாவது தேசிய விடுமுறை. அரசு விடுமுறைகள் மாநிலம் சார்ந்த விடுமுறைகள் மட்டுமே, அவை நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வங்கி விடுமுறைகளாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். 

மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் விபரம்

1 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - சாப்ச்சூர் குட் (மிசோரம் மாநிலத்தில் மட்டும்)

3 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை (நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

6 மார்ச் 2024 புதன்கிழமை - மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி (ரெஸ்ட்ரிக்டட் விடுப்பு)

8 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி

9 மார்ச் 2024 சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

10 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வார விடுமுறை (நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

12 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - ரமலான் ஆரம்பம் (ரெஸ்ட்ரிக்டட் விடுப்பு)

17 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வார விடுமுறை (நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

20 மார்ச் 2024 புதன்கிழமை - மார்ச் உத்தராயண அனுசரிப்பு (சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

22 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - பீகார் நாள் (பீகார் மாநிலத்தில் மட்டும்)

23 மார்ச் 2024 சனிக்கிழமை - பகத்சிங் தியாகி தினம் (பல மாநிலங்களில் விடுமுறை)

24 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வார விடுமுறை / ஹோலிகா தஹான் 

25 மார்ச் 2024 திங்கட்கிழமை - ஹோலி பண்டிகை (வட மாநிலங்கள் பலவற்றில் விடுமுறை)

26 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - யாசங் (மணிப்பூர்மாநிலத்தில் மட்டும்)

28 மார்ச் 2024 வியாழக்கிழமை - மாண்டி வியாழன் அனுசரிப்பு ரெஸ்ட்ரிக்டட் விடுப்பு

29 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி விடுமுறை

30 மார்ச் 2024 சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

31 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - ஈஸ்டர் தினம் ரெஸ்ட்ரிக்டட் விடுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News