போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் உள்ள ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திலிருந்து உங்களிடம் எவ்வளவு மாத வருமானம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்ட கால்குலேட்டர் உதவிபுரிகிறது.
பிஓஎம்ஐஎஸ் எனப்படும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் அரசால் அங்கீகரிக்கப்படும் ஒரு சிறப்பான சிறுசேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பணம் பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை மற்றும் வட்டியானது முதலீட்டில் பொருந்தக்கூடிய விகிதத்தில் சேர்க்கப்பட்டு, மாதாந்திர அடிப்படையில் முதலீட்டரின் கணக்கில் செலுத்தப்படும். அரசாங்கம் அதன் விருப்பத்திற்கேற்ப இந்த திட்டத்தின் வட்டி விகிதங்களை திருத்தியமைக்கிறது, இதில் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7% ஆகும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு ரூ.1000 மற்றும் ஒற்றைக் கணக்கில் அதிகபட்ச வரம்பாக ரூ.4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் அதிகபட்ச வரம்பாக ரூ.9 லட்சம் முதலீடு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
முதலீட்டாளருக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வட்டி வழங்கப்படும், கணக்கின் முதிர்வு வரை வட்டி வழங்கப்படும். மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டுக்கணக்கை திறக்கலாம், 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களது சொந்த பெயரிலேயே கணக்கை திறந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் டெபாசிட்டை திரும்பப்பெற அனுமதிக்கப்படமாட்டாது. கணக்கு திறக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டால் டெபாசிட் செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பும் கணக்கு முடிவடைந்தால் டெபாசிட் செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 1% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும். கணக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் சம்மந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் பாஸ்புக்கை சமர்ப்பித்து தொகையை பெற்றுக்கொள்ளலாம். அதுவே கணக்கு முதிர்ச்சியாவதற்கு முன்னரே முதலீட்டாளர் இறந்துவிட்டால் அவரது நாமினி சென்று இந்த தொகையை வாங்கிக்கொள்ளலாம். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திலிருந்து உங்களிடம் எவ்வளவு கார்பஸ் உள்ளது மற்றும் எவ்வளவு மாத வருமானம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்ட கால்குலேட்டர் உதவிபுரிகிறது.
மேலும் படிக்க | இந்த 5 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ