Post Office சூப்பர் திட்டம், ரூ10,000 வீதம் முதலீடு; ரூ16 லட்சம் ரிட்டன்
Post Office Recurring Deposit Account என்ற திட்டம் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் திட்டமாகும்.
Post Office Saving Scheme : உங்களின் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய தபால் நிலையம் சிறந்த முறை ஆகும். இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் பணம் மற்றும் உங்களின் முதலீட்டில் கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான போஸ்ட் ஆஃபிஷ் ரெக்குரிங் டெபாசிட் அப்படியான பாதுகாப்பான ரிட்டர்ன்ஸை உங்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இங்கே விரிவாக காண்போம்.
நீங்கள் மிகச்சிறந்த முதலீடுகளை தவணை முறையில் செலுத்த போஸ்ட் ஆஃபிஷ் (Post Office) ரெக்குரிங் டெபாசிட் (RD) சிறந்த முறையாகும். உங்களின் சேமிப்பிற்கு சிறந்த வட்டி விகிதங்களை இந்த திட்டதின மூலம் பெறலாம். இந்த திட்டத்தில் நீங்கள் ரூ. 100 செலுத்தி கூட முதலீட்டினை துவங்கலாம். அதே சமயத்தில் உச்ச வரம்பு முதலீட்டு அளவு என்று எதுவும் இல்லை.
ALSO READ: Post Office FD: அதிக வட்டியுடன் கூடுதல் நன்மைகள் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு
தபால் நிலையங்களில் 5 ஆண்டுகள் ரெக்குரிங் கணக்குகள் மட்டும் துவங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் வருடாந்திர விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும். ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் உங்களின் கணக்கில் அந்த பணம் சேமிக்கப்படும்.
வட்டி விகிதம் விவரம்
தபால் நிலையத்தில் சேமிக்கப்படும் ரெக்குரிங்க் முதலீட்டிற்கான வட்டியானது 5.8% ஆக உள்ளது. இந்த புதிய விகிதம் ஏப்ரல் 1, 2020 முதல் பொருந்தும். இந்திய அரசு அதன் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிக்கிறது.
மாதந்தோறும் 10 ஆயிரம் முதலீடு செய்தால் 16 லட்சம் கிடைக்கும்
ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாயை தபால் நிலைய RD திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 5.8% வீதத்தில் 16 லட்ச ரூபாய்க்கு மேல் உங்களுக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதலீடு | 10,000 ரூபாய் |
வட்டி | 5.8% |
மெச்சூரிட்டி | 10 ஆண்டுகள் |
10 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை = ரூ 16,28,963
RD கணக்கைப் பற்றிய முக்கியமான தகவல்கள்
நீங்கள் தொடர்ந்து கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும், நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவிகிதம் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். 4 தவணைகள் தொடர்ச்சியாக நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களின் கணக்கு மூடப்பட்டுவிடும்.
வங்கிகளின் தொடர் வைப்புத்தொகை
வங்கி | RD விகிதங்கள் | காலம் |
Yes Bank | 7.00% | 12 மாதங்கள் முதல் 33 மாதங்கள் வரை |
HDFC Bank | 5.50% | 90/120 மாதங்கள் |
Axis Bank | 5.50% | 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
SBI Bank | 5.40% | 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
ALSO READ: Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR