தபால் நிலையத்தின் அட்டகாசமான திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!!
Post Office Time Deposit Scheme: வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று.
Post Office Time Deposit Scheme: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை சேர்த்து வைப்பதும் அதே அளவு முக்கியமாகும். பணத்தை சேமித்து, முதலீடு செய்து அதை பெருக்க பல திட்டங்கள் உள்ளன. வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் பல வகையான சேமிப்பு திட்டங்கள் இயக்கப்படுகின்றன. வங்கியை விட தபால் அலுவலகத்தில் சிறந்த வருமானம் கிடைக்கும் சில திட்டங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அவற்றில் ஒன்று. பொதுவாக இது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி (Post Office FD) என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்
தபால் நிலையத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான FD விருப்பம் உள்ளது. நீங்கள் அஞ்சலகத்தில் 5 வருட FD இல் முதலீடு செய்தாலோ அல்லது ஏற்கனவே முதலீடு செய்திருந்தாலோ, அதிலிருந்து நல்ல வட்டியைப் பெறலாம். இதன் மூலம் உங்கள் தொகையை இரண்டு மடங்கை விட அதிகமாக்கலாம். அதாவது, வட்டியில் இருந்தே அசல் தொகையை விட அதிகமாக சம்பாதிக்கலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரண்டு மடங்கை விட அதிக தொகை ஈட்டுவது எப்படி?
திட்டத்தின் கால அளவிற்கு ஏற்ப தபால் அலுவலக திட்டத்தில் வெவ்வேறு வட்டி கிடைக்கும்.
- முதலீட்டாளர் ஒரு வருட FD இல் முதலீடு செய்தால், 6.9% வட்டி கிடைக்கும்.
- இரண்டு வருட FD -க்கு 7% வட்டி கிடைக்கும்.
- மூன்று வருட FD -க்கு 7.1% வட்டி கிடைக்கும்.
- ஐந்து வருட FD -க்கு 7.5% வட்டி கிடைக்கும்.
ஆனால் உங்கள் தொகையை இரண்டு மடங்கை விட அதிகமாக்க விரும்பினால், நீங்கள் முதலில் 5 வருட FD இல் முதலீடு செய்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த FD -யை நீட்டிக்க வேண்டும். 5 வருட எஃப்டி இல் வரிச் சலுகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சத்துக்கு மேலாக்குவது எப்படி?
- போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் 5 ஆண்டுகள் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
- தபால் அலுவலக கால்குலேட்டரின் படி, ரூ.5,00,000 முதலீட்டில் 5 ஆண்டுகளில் வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும்.
- அதாவது முதிர்ச்சியின் போது மொத்தம் ரூ.7,24,974 கிடைக்கும்.
- அதை ஒருமுறை நீட்டித்துக்கொண்டால், அதாவது திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், மொத்தம் 10 வருடங்களில் உங்களுக்கு 5,51,175 ரூபாய் வட்டி கிடைக்கும்.
- அதாவது முதலீட்டாளரின் வட்டி அவரது அசலை விட அதிகமாக இருக்கும்.
- இந்த வகையில், 10 ஆண்டுகளில் முதலீட்டாளருக்கு ரூ.10,51,175 என்ற பெரிய தொகை கிடைக்கும்.
திட்டத்தை நீட்டிப்பதற்கான விதிகள் என்ன?
அஞ்சல் அலுவலக நேர டெபாசிட் கணக்கை முதிர்வு தேதியிலிருந்து இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் நீட்டிக்க முடியும். 1 ஆண்டுக்கான FD முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் நீட்டிக்கப்படலாம். 2 ஆண்டு FD முதிர்வு காலத்தின் 12 மாதங்களுக்குள் நீட்டிக்கப்பட வேண்டும்.3 அல்லது 5 ஆண்டுகால எஃப்டி -ஐ நீட்டிக்க முதிர்வுக்கு 12 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவற்றைத் தவிர, கணக்கைத் திறக்கும் போதும், முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிப்பதாற்கான கோரிக்கையை வைக்கலாம். முதிர்வு தேதியில் தொடர்புடைய டிடி கணக்கிற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ