Public Provident Fund: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO நடத்தும் அரசாங்க திட்டமான பொது வருங்கால வைப்பு நிதியின் (Public Provident Fund) சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பிபிஎஃப் அளிக்கும் விசேஷ நன்மைகள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் புதுப்பிப்புகள் குறித்து சந்தாதாரர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிஎஃப் உறுப்பினகள் தங்கள் கணக்கில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பிஎஃப் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் முதலீட்டுப் பணத்தைத் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தேதியின் மகத்துவம் என்ன? இதனால் பிபிஎஃப் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? இது பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PPF Benefits: 5 ஆம் தேதியின் மகத்துவம்


EPFO ​​விதிகளின்படி, பிஎஃப் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பிஎஃப் கணக்கில் (PF Account) ஆண்டு வட்டி அளிக்கிறது. ஆனால் வட்டி மாத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசித் தேதிக்கும் அடுத்த மாதத்தின் ஐந்தாம் தேதிக்கும் இடையே பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும் என்பது கணக்கீட்டு விதி. அதாவது, இந்தக் காலகட்டத்தில் உங்கள் கணக்கில் உள்ள பணத்தின் அடிப்படையில் வட்டி வழங்கப்படும். இதற்குப் பிறகு பணத்தை டெபாசிட் செய்தால் அந்த மாதத்திற்கான வட்டி கிடைக்காது. 


பிபிஎஃப் விதிகள் (PPF Account Rules)


இந்த விதியை குறிப்பாக தங்கள் பிஎஃப் கணக்கில் மொத்த தொகையை டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். பிபிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் அதை மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம். சிலர் ஒரே நேரத்தில் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்கிறார்கள். அப்படி டெபாசிட் செய்பவர்கள் தங்கள் கணக்கில் பணத்தை 5 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்தால், அந்த முழு டெபாசிட்டுக்கும் கணக்கிடப்பட்ட வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | ஆதார் அட்டையில் போட்டோவை மற்றணுமா? ரொம்ப ஈஸியாக செய்யலாம்


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம் 


ஒரு பிபிஎஃப் சந்தாதாரரின் (PPF Subscriber) கணக்கில் ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். அவர் 5 ஆம் தேதிக்கு முன் 1.5 லட்சத்தை மொத்தமாக அதில் டெபாசிட் செய்கிறார். அந்த சூழ்நிலையில், அவரது வட்டி தற்போதைய 7.1% வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். 5 ஆம் தேதிக்கு முன்னர் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.1.5 லட்சத்திற்கான சிம்பிள் இண்ட்ரஸ்டை கணக்கிட்டால், ஒரு வருடத்தில் 10,650 ரூபாய் வட்டியாக கிடைக்கும். தவிர, ஏற்கனவே செய்த டெபாசிட்டுகளுக்கான வட்டியின் காம்பவுண்டிங் பலனும் கிடைக்கும். ஏப்ரல் 5ம் தேதிக்குப் பிறகு முதலீடு செய்தால் 11 மாதங்களுக்கு மட்டுமே பிபிஎஃப் வட்டி (PPF Interest) கிடைக்கும். அந்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படாது. ஆகையால், சந்ததாரர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு பெரிய தொகையை இழக்க நேரிடலாம்.


மேலும் படிக்க | உலக பணக்காரர்கள் பட்டியல் 2024: அம்புட்டு சொத்து வைத்திருக்கும் அம்பானிக்கு எந்த இடம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ