PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. மைனர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐ -களுக்கு சொந்தமான பிபிஎஃப் கணக்குகள் (PPF Account) இதன் வரம்புக்குள் வரும். அரசாங்கம் இந்த மாற்றம் தொடர்பான சுற்றறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிஎஃப் கணக்கில் அக்டோபர் 1 முதல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்:
சிறார்களின் பெயர்களில் திறக்கப்படும் PPF கணக்குகள் (PPF account opened under the name of a minor)
(i) தன் பெயரில் கணக்குகளை கொண்டுள்ள சிறார்களின் கணக்குகளுக்கு, அவர்கள் கணக்கைத் தொடங்கத் தகுதி பெறும் வரை, அதாவது 18 வயதை அடையும் வரை, POSA வட்டி (POSA Interest) செலுத்தப்படும். அதன் பிறகு, கணக்கிற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதம் (Interest Rate) வழங்கப்படும்.
(ii) அத்தகைய கணக்குகளுக்கான முதிர்வு காலம், சிறார் தேவையான வயது வரம்பை அடைந்த நாளிலிருந்து, அதாவது, அவர் கணக்கைத் திறக்கத் தகுதி பெறும் தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு
ஒன்றுக்கும் மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகள் (More than one PPF Account)
(i) ஒவ்வொரு வருடத்திற்கும் பொருந்தக்கூடிய உச்சவரம்புக்குள் வைப்புத் தொகை இருந்தால், முதன்மைக் கணக்குக்கு திட்டத்திற்கான வட்டி விகிதம் கிடைக்கும். (முதன்மைக் கணக்கு என்பது, தபால் அலுவலகம்/ஏஜென்சி வங்கியில் முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கணக்குகளில் ஒன்றாகும். முதலீட்டாளர் முறைப்படுத்தப்பட்ட பிறகு தொடர விரும்பும் கணக்கு முதன்மைக் கணக்காக கருதப்படும்.)
(ii) ஒவ்வொரு ஆண்டும் பொருந்தக்கூடிய முதலீட்டு உச்சவரம்பிற்குள் முதன்மை கணக்கு இருக்கும் பட்சத்தில், இரண்டாவது கணக்கின் மீதித் தொகை முதல் கணக்குடன் இணைக்கப்படும். இணைப்பிற்குப் பிறகு, முதன்மைக் கணக்கு நடைமுறையில் உள்ள திட்ட வட்டி விகிதம் தொடர்ந்து கிடைக்கும். இரண்டாவது கணக்கில் அதிகப்படியான இருப்பு இருந்தால், பூஜ்ஜிய சதவீத வட்டியுடன் இது திருப்பி அளிக்கப்படும்.
(iii) முதன்மை மற்றும் இரண்டாவது கணக்கைத் தாண்டிய கூடுதல் கணக்குகளுக்கு, அந்தக் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து பூஜ்ஜிய சதவீத வட்டி கிடைக்கும்.
NRI மூலம் PPF கணக்கின் நீட்டிப்பு (Extension of PPF account by NRI)
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (PPF), 1968 இன் கீழ் தொடங்கப்பட்ட செயலில் உள்ள NRI -களின் PPF கணக்குகளுக்கு மட்டும், கணக்கு வைத்திருப்பவரின் வதிவிட நிலையைப் படிவம் H குறிப்பாகக் கேட்கவில்லை என்றால், POSA வட்டி விகிதம் வழங்கப்படும். 30 செப்டம்பர் 2024 வரை இது கிடைக்கும். அதன் பின்னர், அந்தக் கணக்குகளுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ