இந்த அரசு திட்டத்தில் ரூ.417 டெபாசிட் செய்தால் ரூ. 1 கோடி கிடைக்கும்!
ஒரு நாளைக்கு ரூ. 417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும்.
பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) நம்பகமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதில் முதலீடு செய்யக்கூடிய பணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உள்ளது, இது முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல சலுகைகளையும் வழங்குகிறது மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கு இது ஒரு சரியான தேர்வாகவும் இருக்கும். பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்டின் வட்டி மாதாந்திர அடிப்படியில் கணக்கிடப்படுகிறது மற்றும் இது முதலீட்டாளர்களுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து 15 ஆண்டுகள் அவர்களது கணக்கில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு முதலீட்டாளர் 15 ஆண்டுகள் பங்களித்த பின்னர் அவர்கள் அந்த கணக்கை முடித்துக்கொள்ள விரும்பாவிட்டால் அவர்கள் அந்த பிபிஎஃப் கணக்கின் காலத்தை அவர்களுக்கு தேவைப்படும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். இந்த பிபிஎஃப் கணக்கை ஐந்தாண்டுகளுக்குள் பிளாக் செய்தும் கொள்ளலாம், முதலீட்டாளர்கள் அவர்களது பிபிஎஃப் கணக்குகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறமுடியும். பிபிஎஃப் கணக்கில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளுக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மற்ற முதலீடுகளை விட இது நிலையான மற்றும் அதிகமான வருமானத்தை தருகிறது.
மேலும் படிக்க | UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.1000 என்கிற கணக்கில் ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யும்போது உங்களுக்கு கணக்கின் முதிர்வில் ரூ.1 கோடி வரை கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும். தேவைப்படின் முதலீட்டளர்களா கணக்கை மேலும் ஐந்து வருட காலங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். அவ்வாறு பிபிஎஃப் கணக்கில் 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்வது சுமார் ரூ.66 லட்சத்தை பெறலாம், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்தால், 25 ஆண்டுகளில் உங்கள் பிபிஎஃப் இருப்பு சுமார் ரூ.1 கோடிக்கு ரூபாய்க்கும் மேல் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ