ரேஷன் கார்டு அப்டேட்: செப்டம்பர் 30க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும்
ரேஷன் பொருட்கள் தடையின்றி பெற இந்த முக்கிய வேலையை செய்து முடிக்க மேலும் இரண்டு மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் சூழலை மனதில்கொண்டு இதன் காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்தது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation One Ration Card) திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ம் கொண்டு வந்தபோது ரேஷன் (Ration Card) ஆதார் இணைப்பு கட்டாயம் என கூறப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை மாதம் 31க்குள் அமல்படுத்த டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ALSO READ | Tamil Nadu: ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருந்தால் கிரிமினல் குற்றம்
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி நேற்று முன்தினம் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டையுடன் ஆதாரை எப்படி இணைப்பது
* ஆன்லைன் : (https://www.uidai.gov.in) இந்த அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
* ஆன்லைன் வசதியில்லாமல் நேரிடையாக ரேஷன் கடையிலேயே எளிமையாக இதனை செய்துகொள்ள முடியும்
1. உங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் செல்லவும்
2. அங்கு நீநகல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் அட்டையின் புகைப்பட நகல்கள், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டை எடுத்துச் செல்லவும்
3. உங்கள் ஆதார் அட்டை எண்ணுடன் மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்
4. நீங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு SMS அனுப்பப்படும்.
ALSO READ | ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க சுலபமான வழிமுறைகள் இவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR