ஆன்லைன் ஆப் மூலம் லோன் வாங்கியுள்ளீர்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!
வங்கியால் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் ஆப்களின் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் மூலம் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லோன் ஆப் மோசடிகளைத் தடுப்பதற்கான வழிகளை வங்கி பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ஆப் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உள்ளூர் காவல்துறையை அணுக வேண்டும் என்று கூறினார். வங்கியால் பதிவு செய்யப்பட்ட ஆப்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, இந்தப் பயன்பாடுகளைச் சமாளிக்க சில உள்கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கி இணையதளத்தில், எந்தெந்த ஆப்ஸ்கள் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறித்த பட்டியல் உள்ளது. லோன் ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கு முன், இந்த ஆப் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்த்த பின்னரே அதனை பயன்படுத்துங்கள். அந்த ஆப் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதில் ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் மத்திய வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும். வங்கியில் பதிவு செய்யப்படாத செயலிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்கள் உள்ளூர் காவல்துறையை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசுகையில், "டிஜிட்டல் தளங்கள் மூலம் கடன் வழங்குவது தொடர்பாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு பரந்த ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மிக விரைவில் நாங்கள் வெளிவருவோம் என்று நான் நினைக்கிறேன், அவற்றில் பல அங்கீகரிக்கப்படாதவை, பதிவு செய்யப்படாதவை மற்றும் சட்டவிரோதமானது,” என்று கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தற்போது 81 ஆப் ஸ்டோர்களில் உள்ள 1,100 லெண்டிங் ஆப்களில் 600 சட்டப்பூர்வமானது அல்ல, இது ஜனவரி 01, 2021 முதல் பிப்ரவரி 28, 2021 வரையிலான டேட்டாக்களை அடிப்படையாக வைத்து கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்..SBI வழங்கும் ஆஃபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR