Reserve Bank of India KYC Update: நாடு முழுவதும் நடக்கும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கியால் பல வகையான பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. வாடிக்கையாளர் சரிபார்ப்பு முறையை (Know Your Customer) மேலும் வலுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியின் கீழ், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் KYC முறையை பின்பற்றுமாறு அவ்வப்போது கேட்டுக் கொள்ளப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிப்பாய்வுக்குப் பிறகு, மத்திய வங்கி KYC தொடர்பான 'மாஸ்டர்' வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. இதன் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பிற நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி தங்கள் வாடிக்கையாளர்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.


FATF உட்பட இந்தப் பரிந்துரைகள் புதுப்பிக்கப்பட்டன


பணமோசடி தடுப்பு விதிகள், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) மற்றும் பெரும் அழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகள் தடை) சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் புதிய வழிமுறைகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) இந்தத் திருத்தம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. FATFன் பரிந்துரைகளின்படி சில வழிமுறைகளை புதுப்பித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது


ரிசர்வ் வங்கி வழங்கிய முதன்மை அறிவுறுத்தல்களில், கேஒய்சி -ஐ அவ்வப்போது புதுப்பிப்பிக்க ரிஸ்க் பேஸ்ட் செயல்முறை (Risk Based System) மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்க உதவும் பிபிஎஃப்: SBI -இல் ஆன்லைனில் இப்படி திறக்கலாம்


இதன் கீழ், மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அலகுகள் KYC -ஐ அவ்வப்போது புதுப்பிப்பிக்க ரிஸ்க் பேஸ்ட் சிஸ்டத்தை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர் விசாரணையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் தக்கவைக்கப்படுவதை உறுதிசெய்ய, குறிப்பாக ஆபத்து அதிகமாக இருக்கும் இடங்களில் உறுதி செய்ய இது செய்யப்பட்டுள்ளது.


கூடுதல் தகவல்


கடன் பத்திரங்களை திரும்ப அளிப்பது குறித்து ரிசர்வ வங்கியின் அறிவுறுத்தல்


சமீபத்தில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவை வழங்கியது. வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி கட்டி முடித்த 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தருமாறு NBFC வங்கிகளுக்கு ஆர்பிஐ (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், வங்கிகள் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும். கடன்களின் புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுகையில், மொத்தக் கடன்களில் 25 சதவீதம் வீட்டுக் கடன்கள் அதாவது சொத்து தொடர்பானவையாக உள்ளன. ஆகையால் இந்த மாற்றத்தை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 


ரிசர்வ் வங்கி அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் அனைத்து வகையான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அனைத்து அசல் ஆவணங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.


பணவீக்கம் குறித்து ஆர்பிஐ


தீபாவளிக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய பரிசு கிடைத்துள்ளது. சில்லறை பணவீக்கம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 6.83 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், செப்டம்பரில் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 6.56 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சில்லறை பணவீக்க விகிதம் 5.33 சதவீதம் மற்றும் 4.65 சதவீதமாக இருந்தது. 


மேலும் படிக்க | நவீன வசதிகளுடன் ஜொலிக்கும் வந்தேபாரத் ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ