RBI Update: உங்களுக்கு வங்கியில் கணக்கு உள்ளதா? அடிக்கடி பண பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான சில முக்கிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஏதாவது வங்கியில் கணக்கு உள்ளது. தாங்கள் சேமிக்கும் பணத்தை டெபாசிட் செய்ய அனைவரும் வங்கியில் கணக்கை தொடங்குகிறார்கள். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) அவ்வப்போது பல புதுப்பித்தலக்ளை வழங்குகிறது. தற்போதும் அப்படி ஒரு அப்டேட் வந்துள்ளது. இதை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். 


வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், கணக்கில் எவ்வளவு தொகையை வைத்திருக்க முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இது தவிர வங்கிகளின் பிற முக்கிய விதிகள் பற்றிய புரிதல் இருப்பதும் மிக அவசியம். 


மக்கள் சேமிக்கும் பணத்தை டெபாசிட் செய்வதற்காகவே சேமிப்புக் கணக்கு (Savings Account) திறக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் கணக்கில் தெரிந்தோ தெரியாமலோ அதிக பரிவர்த்தனைகளைச் செய்யத் தொடங்குகிறார்கள். இப்படி செய்வது சரியா? ஆர்பிஐ (RBI) விதிமுறைகள் இதை பற்றி கூறுவது என்ன? இவற்றை பற்றி இங்கே காணலாம். 


ஒரு வங்கி வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கில் ஒரு வரம்பு வரை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். ஒருவர் தனது சேமிப்புக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் வைத்திருந்தால், வருமான வரித்துறையின் நோடீஸ் வெளியிடப்படலாம். இதைப் பற்றிய ரிசர்வ் வங்கி சில விதிகளை வகுத்துள்ளது. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த விதிகளை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். 


மேலும் படிக்க | EPFO அளித்த தீபாவளி பரிசு, குஷியில் பிஎஃப் சந்தாதாரர்கள்: உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா?


சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம்


ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. வங்கி வாடிக்கையாளர்கள்  தங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இந்தக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் தங்கள் வசதிக்கு ஏற்ப சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் வருமான வரி துறையின் (ITR) கவனத்தில் வந்து, அதை பற்றிய விவரம் கேட்கப்பட்டல், அதைப் பற்றிய தகவலை நீங்கள் கொடுக்க வேண்டும்.


ஒரு வங்கிக் கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் தகவல் கொடுக்க வேண்டியது கட்டாயம். பிக்ஸ்ட் டெபாசிட்கள் (Fixed Deposit), மியூசுவல் ஃபண்டுகள், பாண்டுகள், மற்றும் பங்குகளில் (Stock Trading) செய்யப்படும் முதலீடுகளுக்கும் இந்த வரம்பு பொருந்தும். எந்த ஒரு கணக்கிலும் ஒரே நேரத்தில் ரூ. 1,00,000 பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ அனுமதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிமாற்றம், Paytm, phonepe அல்லது பிற மொபைல் செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். அல்லது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் -ஐ பயன்படுத்தலாம்.


டிஜிட்டல் பேங்கிங்கை ஊக்குவிப்பதற்காக, பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மற்றும் பண டெபாசிட்களுக்கு வரம்புகளை விதித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கியின் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும். உங்கள் கணக்கு எஸ்பிஐயில் இருந்தால், குறைந்தபட்ச இருப்பு தொகையை நீங்கள் பராமரிக்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் கணக்கு வேறு ஏதேனும் வங்கியில் இருந்தால், நீங்கள் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான நற்செய்தி: 50% டிஏ, எக்கச்சக்க ஊதிய உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ